தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரும்பு மனிதர் என்றும் கோழை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர் அன்புமணி ராமதான் எனவும் அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார்.
அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், ” வழக்கிற்கு பயந்து மத்திய அரசுக்கு மண்டியிடுவது கோழைத்தனம்.. மாநில உரிமைக்காக நெஞ்சை நிமிர்த்தி, உறவுக்கு கைக்கொடுப்போம்.. உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற தாரக மந்திரத்தோடு, ஒன்றிய அரசுக்கே சவால் விடுகின்ற முதன்மையான முதலமைச்சரை கோழை எனக் கூறுபவர்கள், கோழை என்ற கூற்றுக்கு அர்த்தம் தெரியாதவர்கள்.. மாநில அரசின் உரிமைக்காக ஒன்றிய அரசை எதிர்த்து குரல் கொடுக்கின்ற இரும்பு மனிதராக ஸ்டாலின் இருக்கிறார்.