fbpx

’நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்’.!! தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!!

நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி 2ஆம் தேதியன்று தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக அறிவித்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்தார். கட்சியின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடைபெறவுள்ளதாகவும், அதற்கு முன்னரே கட்சி கொடியை விஜய் அறிமுகம் செய்வார் என்றும் கூறப்பட்டது.

இதற்கிடையே, தவெக கொடியில் உள்ள நிறங்கள் மற்றும் வாகை மலர் இடம்பெறுவது குறித்து விஜய் தரப்பில் ஆலோசனைகள் நடைபெற்று வந்தது. மேலும், பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடி பறக்கவிடப்பட்டது. ஆனால், இது கட்சிக் கொடி இல்லை என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாளை முதல் கொடி பறக்கும் என தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப்போகும் வீரக் கொடியை நாளை காலை 9 மணியளவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், கட்சி கொட்டிப் பாடலை வெளியிட உள்ளதாகவும் விஜய் அறிவித்துள்ளார்.

English Summary

Vijay has said that the heroic flag will be launched at 9 am tomorrow at 9 am.

Chella

Next Post

JOBS | டிகிரி முடிச்சிருக்கீங்களா? இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Wed Aug 21 , 2024
Indian Bank has released a notification to fill up 300 vacancies for the post of Local Bank Officers.
இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்பு..!! என்ன செய்ய வேண்டும்..?

You May Like