பெண்கள் பேருந்தில் ஓசியில் பயணம் செய்வதாக அமைச்சர் பொன்முடி பேசியதற்கு சீமான் கண்டனம் தெரிவித்து உள்ளார். சென்னையில், தனியார் மயத்தை அரசு கைவிட தபால்த்துறை ஊழியர்கள் செய்த போராட்டத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியது:-
இரண்டரை லட்சம் கோடி கடன் வைத்துள்ளார் அதானி. அவரைப்போய் உலகப் பணக்காரர் என்கின்றனர். இது ஒரு கொடுமையான விஷயம். மேலும் சொந்த நாட்டு மக்களை பிச்சைக்காரர்களாக வைத்திருப்பது தான் இந்த நாடு ஏற்றுக்கொண்ட பொருளாதாரக்கொள்கை.
இது தான் இவர்களின் ஆட்சிமுறை. அரசு பேருந்தை எங்களின் வரி பணத்தில் தான் வாங்கி இருக்கிரீர்கள். உங்கள் பணத்தில் வாங்கவில்லை. பேருந்தில் பெண்கள் ஓசி-யில் பயணம் செய்யவில்லை என்றார்.