இந்திய ரயில்வே இன்று 297 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது.
உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக பராமரிப்பு செயல்பாட்டு தொடர்பான பணிகள் காரணமாக இந்திய ரயில்வே இன்று 297 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது. ரயில்வே துறையின் அறிவிப்பின்படி, ஜனவரி 19 ஆம் தேதி புறப்பட வேண்டிய மேலும் 68 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் தானாகவே ரத்து செய்யப்பட்டு, பயனரின் கணக்குகளில் பணம் திரும்ப செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் தானாகவே ரத்து செய்யப்பட்டு, பயனரின் கணக்குகளில் பணம் திரும்பப் பெறப்படும் என்பதை அனைத்து பயணிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கிடையில், கவுண்டர்கள் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பயணிகள் பணத்தைத் திரும்பப் பெற முன்பதிவு கவுண்டருக்குச் சென்று பணத்தை திரும்ப பெறலாம். indianrail.gov.in/mntes என்ற இணையதளம் வாயிலாக எந்தெந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை அறிந்து கொள்ளலாம்.