நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளித்த புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.
நடிகை விஜயலட்சுமி கடந்த ஆக.28-ம் தேதி காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், ‘மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சீமான் என்னைத் திருமணம் செய்துகொண்டார். நாங்கள் கணவன், மனைவியாக வாழ்ந்தோம். நான் 7 முறை கர்ப்பமானேன். ஆனால்,என்னுடைய அனுமதியின்றி, மாத்திரை மூலம் கருச்சிதைவு செய்தார். தற்போது சீமான் கட்சியைச் சேர்ந்த மதுரை செல்வம் என்பவர் என்னை மிரட்டுகிறார். எனவே, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ மேலும் மேலும், சினிமாவில் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த 60,00,000/- லட்சம் பணத்தையும் 35,00,000/- மதிப்பிலான நகைகளையும் சீமான் பெற்றுக் கொண்டதாகப் தெரிவித்து இருந்தார். இது குறித்து அவர் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்திலும் புகாரும் அளித்தார்.மேலும், திருவள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் விஜயலட்சுமியின் வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து, நேரில் ஆஜராகுமாறு வளசரவாக்கம் போலீஸார் சீமானுக்கு சம்மன் அனுப்பினர். ஆனால், கடந்த 12-ம் தேதி சீமான் ஆஜராகாமல், அவரது வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அதனைத்தொடர்ந்து கடந்த 14ஆம் தேதி சீமானுக்கு 2-வது முறையாக சம்மன் வழங்கினர். சீமான் தரப்பில் நேரில் வர ஒத்துக்கொண்டார் இருந்தாலும் குற்றம் சாட்டிய விஜயலட்சுமி, வீரலட்சுமியும் அங்கு வர வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனுவை கொடுத்தனர். மேலும் சீமானின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாகக் கூறி, நடிகை விஜயலட்சுமி மற்றும் தமிழர் முன்னேற்றப் படை நிறுவனத் தலைவர் வீரலட்சுமி ஆகியோருக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும். இல்லையேல், 15 நாட்களுக்குள் தாங்கள் தெரிவித்த கருத்துகளுக்காக பொதுவெளியில் மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லை என்றால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில் சீமான் மீதான புகார்களை நடிகை விஜயலட்சுமி திரும்பப் பெற்றுள்ளார். நேற்று இரவு வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு வந்த அவர், சீமான் மீதான அனைத்து புகார்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். எழுத்துப்பூர்வமாக புகார் மனு அளித்திருந்த நிலையில் அதனை வாபஸ் வாங்கியுள்ளார். வழக்கை வாபஸ் பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை எனவும் புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை என தெரிவித்தார். மேலும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை, தனி ஒருவராக போராட முடியவில்லை என குறிப்பிட்டார். சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை என நடிகை விஜயலட்சுமி கூறினார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த விஜயலட்சுமி, “காவல் துறையில் புகார் அளித்த பிறகு உரியப் பாதுகாப்புடன் வீரலட்சுமிக்கு தெரிந்த இடத்தில் தான் தங்கி இருந்தேன். இருப்பினும், கடந்த சில தினங்களாக வீரலட்சுமி வேறு வழியில் செல்கிறார் என்னையும் வேறு வழியில் தள்ளப் பார்க்கிறார்.
நேற்று இரவு முதல் அந்த இடத்தில் இருந்து என்னை வெளியேற சொன்னார்கள், சொல்ல முடியாத அதிகமான கொடுமைகள் நடந்தது. சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை. சீமானிடம் பேசினேன், அவரை தமிழ்நாட்டில் ஒன்னும் பண்ண முடியாது. சீமான் என்னை திட்டுனாரு, பரவாயில்லை இருக்கட்டும், காசு எல்லாம் நான் வாங்கவில்லை, இந்த வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு பெங்களூர் செல்கிறேன் யாருடைய வற்புறுத்தலினாலும் வாபஸ் பெறவில்லை. வழக்கை தொடர்வது சென்னைக்கு வருவது இனி இல்லை இந்த வழக்கில் எதிர்பார்த்த அளவுக்கு திருப்தி இல்லை. நான் என் தோல்வியை ஒத்துக்கொள்கிறேன்” என்று அவர் கூறியிருந்தார்.