சொந்த வீடு என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் கனவு. பலருக்கு இந்த சொந்த வீடு கனவு கனவாகவே போய் விடுகிறது. தன்னுடைய வாழ்நாள் முடிவதற்குள்ளாக ஒரு நாளாவது சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்று ஏங்கும் எத்தனையோ உள்ளம் இன்றும் இருக்கத் தான் செய்கிறது. அப்படியான இந்த சொந்த வீட்டின் கனவினை நினைவாக்க வேண்டுமெனில் அதற்கு ஒரு சில தெய்வ வழிபாடுகள் உதவி புரியும் என்று சொல்லப்படுகிறது.
சொந்த வீடு அமைவதற்கான யோகத்தை தரக்கூடிய கடவுள் முருகர் தான். ஏனென்றால், வீடு வாசல் அமைவதற்கான யோகத்தை தருபவர் செவ்வாய் காரகன். அவருக்கான அதி தேவதையாக விளங்க கூடியவர் முருகப்பெருமான். இதனால் தான் சொந்த வீட்டிற்கான அனைத்து பூஜைகளும், பரிகாரங்களும் முருகப்பெருமானை வைத்து செய்யப்படுகிறது. இதுவும் அப்படியான ஒரு பரிகாரம் தான். இந்த சொந்த வீடு பரிகாரத்திற்கு நமக்கு உதவியாக இருக்கக் கூடிய கோவில் சிறுவாபுரி. இந்த கோவிலுக்கு செவ்வாய்கிழமை அன்று செல்ல வேண்டும்.
அப்படி செல்லும் போது புதிதாக ஒரு செங்கலை வாங்கி அந்த செங்கலை கோவிலில் வைத்து நன்றாக சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம், பொட்டு வைத்து கோவிலின் ஏதேனும் ஒரு இடத்தில் இந்த செங்கலை வைத்து மனதார வழிபாடு செய்து விடுங்கள். பிறகு கோவிலில் இருந்து அந்த செங்கலை நீங்கள் வீட்டுக்கு கொண்டு வந்து விடுங்கள். இந்த செங்கலை உங்கள் வீட்டில் பூஜை அறையில் வைத்து இதை முருகப்பெருமானாகவே பாவித்து வழிபாடு செய்ய வேண்டும்.
அதற்கு செவ்வாய்கிழமையில் இந்த செங்கலை பன்னீரால் சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து மலர் சூட்டி அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த நேரத்தில் எல்லாம் உங்களுக்கு சொந்த வீடு அமைய வேண்டும் என்ற வேண்டுதலை திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே இருங்கள். இந்த வேண்டுதலானது விரைவில் நிறைவேறி சொந்த வீடு வாங்குவதற்கான யோகம் விரைவில் கிடைக்கும். அப்படி வீடு கட்டும் யோகம் வரும் போது இந்த செங்கலை உங்களுடைய வீடு கட்டும் இடத்தில் முதலாவது கல்லாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
அதுமட்டுமின்றி இந்த கோவிலில் சென்று வழிபட்டு வந்தாலே வீடு, திருமண தடை, குழந்தை பாக்கியம் போன்றவை எல்லாம் சரியாகும் என்று சொல்லப்படுகிறது. முருகனை மனதார நம்பி உங்களுடைய முயற்சியுடன் சேர்த்து இந்த ஒரு பரிகாரத்தையும் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். இதில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையலாம்.
Read More : கர்ப்பிணி பெண்களுக்கு செம அறிவிப்பு..!! ஆதார் கட்டாயமில்லை..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!