fbpx

திடீரென சம்பளத்தை குறைத்த ஓனர்..!! ஆத்திரத்தில் ஓடிக் கொண்டிருந்த பேருந்துக்கு தீவைத்த ஓட்டுநர்..!! 4 பேர் உடல் கருகி பலி..!!

தனது சம்பளம் குறைக்கப்பட்ட அதிருப்தியில் பேருந்துக்கு தீ வைத்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த ஜனார்த்தன் என்பவர், ஒரு மினி பேருந்தை ஓட்டி வந்த நிலையில், அவருக்கு திடீரென சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், பேருந்து முதலாளி மீது கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார் ஜனார்த்தன். இந்நிலையில் தான், பேருந்து நிர்வாகத்தின் மீது ஆத்திரத்தில் இருந்த அவர், ஓட்டிக் கொண்டிருந்த பேருந்திற்கு திடீரென தீவைத்துள்ளார்.

தீ வைத்து விட்டதும், அவர் ஓடும் பேருந்தில் இருந்து கீழே குதித்துள்ளார். பின்னர், பேருந்துக்குள் இருந்த பயணிகள் பயத்தில் வெளியேற முயன்றனர். ஆனால், பேருந்தின் கதவு சரியாக திறக்காததால், பேருந்துக்குள் சிக்கிய 4 ஊழியர்களும் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், இந்த சம்பவத்தில் 6 பயணிகள் தீக்காயம் அடைந்தனர்.

இந்நிலையில், பேருந்து டிரைவர் கீழே குதித்ததால் காயமடைந்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்குப் பின் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இச்சம்பவம் புனே பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ’அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சொந்த கட்டிடம் கட்டப்படும்’..!! சட்டப்பேரவையில் அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு..!!

English Summary

The shocking incident in which four people died when a bus was set on fire in protest over a salary cut has left many people shocked.

Chella

Next Post

உல்லாசத்தை நேரில் பார்த்த 13 வயது சிறுமி..!! கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய பெண்..!! கடைசியில் 14 வயது தோழிக்கும் நேர்ந்த சோகம்..!!

Fri Mar 21 , 2025
While visiting the idli shop, Dhanalakshmi, the wife of the shop owner Senthilkumar, was having fun with her boyfriend Anandaraj.

You May Like