பொருளாதாரம் குறித்து அறிந்தோர் அனைவரும் வாரன் பஃபெட் குறித்து தெரிந்து வைத்திருப்பார்கள். சில காலம் உலகின் நம்பர் 1 பணக்காரராக அவர் இருந்தார். பஃபெட்டின் வலது கரமாகவும், உடன் பிறவா சகோதரராகவும் இருந்தவர் தான் சார்லி முங்கர். இவர் உடல்நலக்குறைவால் தனது 99 வயதில் காலமானார்.
பெர்க்ஷயர் ஹாத்வேயின் செய்திக்குறிப்பின்படி, கலிபோர்னியா மருத்துவமனையில் செவ்வாய்கிழமை அன்று சார்லி முங்கர் காலமானார். புத்தாண்டு தினத்தில் அவருக்கு 100 வயது நிறைவடைந்திருக்கும். சார்லியின் உத்வேகம், ஞானம் மற்றும் பங்கேற்பு இல்லாமல் பெர்க்ஷயர் ஹாத்வே அதன் தற்போதைய நிலைக்கு கட்டமைக்கப்பட்டிருக்க முடியாது என்று பஃபெட் ஒரு அறிக்கையில் கூறினார்.
சார்லி முங்கரின் சொத்து மதிப்பு ஏறக்குறைய ரூ.22 ஆயிரம் கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. பங்குச்சந்தையில் நெருங்கால முதலீடு செய்து பணம் ஈட்டுவதில் சார்லி முங்கர் முன்னோடியாக இருந்தார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.