ஓயோ அறைகள் தற்போது இந்தியாவில் இளைஞர்களால் அதிகளவில் பயன்படுத்தப்படுகிது. பெரும்பாலான ஹோட்டல்களுடன் ஒப்பிடும்போது OYO அறைகள் குறைந்த வாடகை விகிதத்தில் வழங்கப்படுவதாலும், பாதுகாப்பானது என்ற நம்பிக்கை வருவதாலும், மக்கள் அதிக அளவில் OYO அறைகளை பயன்படுத்துகிறார்கள். உலகளவில் புகழ்பெற்ற ஹோட்டலாக உள்ள OYO, அங்கு செல்லும் மக்களுக்கு வசதியான மற்றும் தரமான தங்குமிடத்தை வழங்குகிறது.
பிரபல ஹோட்டல் முன்பதிவு நிறுவனமான OYO நாடு முழுவதும் மிகப்பெரிய பிரபலத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், தற்போது 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விரிவடைந்துள்ளது. குறிப்பாக இளைஞர்களைக் கவர்ந்த ஓயோ, ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து செய்திகளில் இடம்பெற்று வருகிறது. தற்போடு ஓயோ ரூம்ஸ் மோசடி பற்றிய சமீபத்திய செய்தி வைரலாகி வருகிறது. சரி, ஓயோ ரூம்ஸில் நடந்த மோசடி என்ன? அந்த நிறுவனம் ஹோட்டல்களை எப்படி ஏமாற்றியது? போன்ற விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
போலி முன்பதிவுகள் மூலம் ஓயோ பணம் சம்பாதிப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த சூழலில், OYO உரிமையாளர் ரித்தேஷ் அகர்வால் மீது ரூ.22 கோடி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சில ஹோட்டல் உரிமையாளர்கள், ஓயோ மோசடி செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். ஓயோ அதன் ஹோட்டல்களில் போலி முன்பதிவுகளைச் செய்து பணம் சம்பாதிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மோசடி முறைகள் மூலம் ஹோட்டல்களை முன்பதிவு செய்வதன் மூலம் ஓயோ தனது வருவாயை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது, இதனால் ஹோட்டல்களுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் ஹோட்டல் கூட்டமைப்பின் தலைவர் ஹுசைன் கான், இந்த விஷயத்தில் கவலை தெரிவித்தார். இது ஹோட்டல் உரிமையாளர்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது என்றார். OYO நிறுவனர் ரித்தேஷ் அகர்வால், ஹோட்டல் மேலாளரிடம் ரூ.22 கோடி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜோத்பூரில் உள்ள 10க்கும் மேற்பட்ட ஹோட்டல் உரிமையாளர்களுக்கு மாநில ஜிஎஸ்டி மற்றும் மத்திய ஜிஎஸ்டியிலிருந்து நோட்டீஸ்கள் வந்துள்ளன.
ஹோட்டல் உரிமையாளர்கள், முதலில் ஓயோ மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டு, சிறிது நேரத்திற்குப் பிறகு ரத்து செய்யப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது, இதை ஹோட்டல் உரிமையாளர்கள் செலுத்த வேண்டும். ஓயோ இந்த வழியில் பணம் சம்பாதிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக தற்போது விசாரணை நடந்து வருகிறது.