fbpx

மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது..!! மத்திய அரசு அறிவிப்பு..!!

இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு மத்திய அரசு பத்ம விருதுகள் வழங்கி கெளரவித்து வருகிறது. கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகள் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் 132 பேருக்கு இம்முறை பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை சேர்ந்த 8 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், திரை கலைஞரும் நடனக் கலைஞருமான வைஜெயந்திமாலாவுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டியக் கலைஞரான பத்மா சுப்ரமண்யம் (பத்ம விபூஷண்), கலை துறையில் நீண்ட பங்காற்றிய விஜயகாந்த் (பத்ம பூஷண்), வள்ளி ஒயில் கும்மி நடன கலைஞர் பத்திரப்பன் (பத்மஸ்ரீ), ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா (பத்மஸ்ரீ), எழுத்தாளர் ஜோ டி குரூஸ் (பத்மஸ்ரீ), நாதஸ்வர கலைஞரான சேசம்பட்டி டி.சிவலிங்கம் (பத்மஸ்ரீ) உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் நடிகர் சிரஞ்சீவி, முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷன் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

சமூக வலைதளங்களில் கடும் கட்டுப்பாடு..!! எச்சரிக்கையை மீறினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை..!!

Fri Jan 26 , 2024
சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டால், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க இலங்கை அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளது. இலங்கையில், கடந்த 2022ஆம் ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அப்போது, அங்குள்ள மக்கள் மற்றும் போராட்டக்காரர்கள் சமூக வலைதளங்களை முக்கிய கருவியாக பயன்படுத்தினர். இதனால் அப்போதைய அதிபர் ராஜபக்சேவை பதவி விலகச் செய்ய வேண்டுமென கட்டாயப்படுத்தியது. இந்நிலையில், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படும் சமூக வலைதளங்களில் பதிவிடும் தனி […]

You May Like