fbpx

Congress | “ஜெயக்குமாரை இவர்கள் தான் கொலை செய்திருக்க வேண்டும்.?” கே.எஸ் அழகிரி பேச்சால் புதிய சர்ச்சை.!!

Congress: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டது தொடர்பாக முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் கமிட்டியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவராக இருந்தவர் ஜெயக்குமார்.

இவர் மாயமான நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தோட்டம் ஒன்றில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இவரது மரணத்தை மர்ம மரணமாக பதிவு செய்த காவல்துறை இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஜெயக்குமார் எழுதியுள்ளதாக சிக்கி இருக்கும் இரண்டு கடிதங்களும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றன.

அந்தக் கடிதத்தில் காங்கிரஸ்(Congress) கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு மற்றும் தற்போதைய எம்எல்ஏ ரூபி மனோகரன் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த கடிதங்களின் உண்மை தன்மை குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த வழக்கை காவல்துறை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இவரது இந்த கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Read More: NewsClick UAPA வழக்கு: அப்ரூவர் அமித் சக்ரவர்த்தியை விடுவிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.!!

Next Post

கோடை காலத்தில் முட்டை சாப்பிடுவதால் ஆபத்தா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Tue May 7 , 2024
கோடையில் முட்டை சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், மனதில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம் என்னவென்றால், நீங்கள் எவ்வளவு முட்டைகளை சாப்பிடுகிறீர்கள்..? என்பது தான். அதுகுறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். முட்டையில் எல்லா வகையான சத்துக்களும் உள்ளன. முட்டையில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. இது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். கோடைக்காலத்தில் உடலுக்குத் தகுந்தாற்போல் தினமும் ஒன்று அல்லது இரண்டு முட்டைகளை மட்டுமே சாப்பிட வேண்டும். அதுவும் […]

You May Like