fbpx

TRICHY| கள்ளக்காதலி வீட்டில் பிணமான பெயிண்டர்.! தீவிர விசாரணையில் காவல்துறை.!

திருச்சியில் கள்ளக்காதலி வீட்டில் பெயிண்டர் ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

திருச்சி பொன் நகர் திருவள்ளுவர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் ராஜா. 50 வயதான இவர் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருச்சி கீழபுதூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்திருக்கிறது. அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தங்கி வந்திருக்கிறார்.

இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று தனது கள்ளக்காதலி வீட்டிற்கு சென்று தங்கி இருக்கிறார் டேவிட் ராஜ். அப்போது அவரது நண்பர்கள் சிலர் செல்போன் மூலம் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். பலமுறை போன் செய்தும் எடுக்காததால் சந்தேகம் அடைந்த நண்பர்கள் கள்ளக்காதலியின் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர்.

அப்போது டேவிட் ராஜா மரணம் அடைந்தது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவரது மனைவி மெட்டில் டா மேரி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி பாலக்கரை இன்ஸ்பெக்டர் பெரியசாமி சம்பவ இடத்திற்கு சென்று டேவிட் ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில் டேவிட் ராஜிக்கு இதய நோய் இருந்தது தெரிய வந்திருக்கிறது. மேலும் இது தொடர்பாக அவ்வாறு மருத்துவ சிகிச்சையும் எடுத்து வந்திருக்கிறார். எனினும் அவரது மரணம் குறித்த விபரம் பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின்பு தெரிய வரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெயிண்டர் கள்ளக்காதலி வீட்டில் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Post

வெயில் காலம் வந்துவிட்டது.! இந்த 5 உணவுகளை கட்டாயமாக சாப்பிட வேண்டும்.!?

Sat Feb 24 , 2024
சூரியன் சுட்டெரிக்கும் வெயில் காலம் வந்துவிட்டது. பிப்ரவரி மாதம் முடிவதற்குள்ளேயே வெளியில் செல்லவே முடியாத அளவிற்கு வெப்பம் அதிகரித்து விட்டது. இவ்வாறு பருவநிலை மாற்றத்தினால் உடலில் வெப்பம் அதிகரித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக வெயில் காலத்தில் உணவு பழக்க வழக்கங்களில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். நாம் உண்ணும் உணவுகள் ஊட்டச்சத்தானதாகவும் அதே நேரத்தில் நம் உடலில் சூட்டை ஏற்படுத்தாத உணவாகவும் […]

You May Like