விவசாயத்திற்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தங்களது மகள்களை பெரிய பணக்காரர்களுக்கு விட்டு வரும் சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தானில் ஏற்பட்ட மோசமான வானிலை மற்றும் புயல் காரணமாக விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின.
இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளானது. இதனைத் தொடர்ந்து வாங்கிய கடனை அடைக்க முடியாததால் அதற்கு ஈடாக தங்களது மகள்களை பெரிய பணக்காரர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதேபோன்று கடன் தொல்லையில் சிக்கிய விவசாயி ஒருவர் தனது 10 வயது மகளை 40 வயது நபருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார். இதற்காக அந்த நபருக்கு பெரும் தொகையும் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மேலும் பாகிஸ்தானில் இளம் குழந்தைகளின் திருமணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது 10 வயது மற்றும் 13 வயது குழந்தைகளை கட்டாய திருமணத்தில் ஈடுபடுத்தி வருவதாகவும் மனிதநேய அமைப்புகளும் குழந்தைகள் அமைப்புகளும் குற்றம் சாட்டியிருக்கின்றன. இதனால் பாகிஸ்தான் பள்ளிகளில் பெண் குழந்தைகள் கல்வி கற்பது குறைந்து வருவதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளன.