fbpx

”பாகிஸ்தான் திருந்தவில்லை”..!! ”கார்கில் இழப்பில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை”..!! பிரதமர் மோடி காட்டம்..!!

ஜூலை 26, 1999 அன்று, லடாக்கில் உள்ள கார்கில் பகுதியில் ஏறக்குறைய 3 மாத கால ‘ஆபரேஷன் விஜய்’ என்ற நடவடிக்கைப் பிறகு இந்திய ராணுவம் தனது வெற்றியை அறிவித்தது. பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்றதை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் விஜய் திவாஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

அந்த வகையில், இன்று கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, அதைத் தொடர்ந்து உரையாற்றினார். அப்போது, “கார்கில் இழப்பில் இருந்து பாகிஸ்தான் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் அளித்து வருகிறது. பாகிஸ்தான் தவறு செய்த போதெல்லாம் தோல்வியைச் சந்தித்தது. அது தன் வரலாற்றில் இருந்து எந்த பாடமும் கற்றுக்கொள்ளவில்லை.

போரில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு என் அஞ்சலி. தேசத்துக்காக அவர்களின் தியாகம் என்றும் அழியாதது. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு ஒவ்வொருவரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். தீய நோக்கத்துடன் இந்தியாவை அணுக்கினால் அடக்கி ஒடுக்கப்படும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Read More : “அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயரைப் பயன்படுத்தக் கூடாது”..!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!!

English Summary

Pakistan learned nothing from Kargil loss. PM Modi has said that Pakistan continues to give shelter to terrorists.

Chella

Next Post

சவுக்கு சங்கர் வழக்கில் இருந்து திடீரென விலகிய நீதிபதிகள்..!! என்ன காரணம்..?

Fri Jul 26 , 2024
A bench headed by Justice MS Ramesh has announced that it will withdraw from the hearing of the recruitment petition challenging the arrest of Chavik Shankar under the Gangster Act.

You May Like