இம்ரான் கானின் கைது சட்டவிரோதமானது என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவித்து, அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.
இம்ரான் கான், பாகிஸ்தானின் பிரதமராக இருந்த போது வெளிநாட்டுப் பயணத்தில் முக்கியப் பிரமுகரிடமிருந்து பெற்ற பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் தனது சொந்த கணக்கில் சேர்த்த வழக்கு என 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக இம்ரான் கான் இஸ்லாமாபாத் வந்தார். அப்போது அவரை போலீஸார் கைது செய்தனர். இம்ரான் கானை சுற்றிவளைத்த அதிரடிப்பபடையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் நாடு முழுவதும் பெறும் பதட்டமான சூழல் உருவாகியது.
இந்த நிலையில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் இம்ரான் கானின் கைது சட்டவிரோதமானது என கூறியுள்ளது, அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.