புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்..
முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ எழுதிய ‘Never Give an Inch: Fighting for the America I Love’ என்ற புத்தகம் நேற்ற வெளியானது.. அதில் இந்தியா பாகிஸ்தான் உறவு குறித்து பல்வேறு விஷயங்களை எழுதி உள்ளார்.. குறிப்பாக 2019-ம் ஆண்டு பிப்ரவரியில். இந்தியா-பாகிஸ்தான் மோதல் ஒரு அணுசக்தி மோதல் ஏற்படும் அளவுக்கு இருந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்… ஆனால் இதை உலகம் சரியாக அறிந்திருக்கவில்லை என்றும், அணு ஆயுத போருக்கு அதிக வாய்ப்பு இருந்தது என்று தனக்கு தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்..
மேலும் “ 2019-ல் நான் வியட்நாமின் ஹனோய் நகரில் இருந்த இரவை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.. அணு ஆயுதங்களில் வட கொரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது போதாது.. நீண்ட காலமாக நிலவும் காஷ்மீர் பிரச்சனை காரணமாக, இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் அச்சுறுத்தத் தொடங்கி உள்ளனர்..
காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.. இதற்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தானுக்குள் பயங்கரவாதிகளுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.. பாகிஸ்தானியர்கள் ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்தினர்.. இந்திய விமானியை சிறை பிடித்தனர்..
அப்போது பாகிஸ்தான் இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டிருந்தது.. இதுகுறித்து அப்போது இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடன் பேச நான் தயாராக இருந்தேன்.. மேலும் இந்தியாவும், தங்கள் அணு ஆயுதங்களை சோதனை செய்ய தயாராக இருந்தது.. புது டெல்லி மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள எங்கள் குழுக்களின் முயற்சியால், அந்த அணு ஆயுத போர் தவிர்க்கப்பட்டது.. ஆனால் அதற்கு எங்களுக்கு சில மணிநேரம் பிடித்தது.. அணுசக்தி போருக்கு தயாராக வில்லை என்று இரு நாடுகளிடமும் எங்கள் குழுவினர் பேச்சுவார்த்தை இந்தியா பாகிஸ்தானை சமாதானம் செய்தனர்..
பிப்ரவரி 27-28 அன்று அமெரிக்க-வட கொரியா உச்சி மாநாட்டிற்காக ஹனோய் இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது என்று பாம்பியோ தெரிவித்துள்ளார்.. மேலும் இந்த நெருக்கடியைத் தவிர்க்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளிடம், அமெரிக்க அதிகாரிகள் ஒரே இரவில் பேச்சுவார்த்தை நடத்தினர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.. எனினும் மைக் பாம்பியோவின் கூற்றுக்கள் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை..
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி, காஷ்மீரின் புல்வாமாவில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடந்தது.. சிஆர்பிஎஃப் வீரர்களை ஏற்றி சென்ற பேருந்து மீது தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்களை கொன்ற புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தியாவின் போர் விமானங்கள் பிப்ரவரி 2019 இல் பாகிஸ்தானில் பாலகோட்டில் ஒரு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாமைத் தாக்கின என்பது குறிப்பிடத்தக்கது..