fbpx

18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் பான் கார்டு!… எப்படி பெறுவது?

பான் கார்டை 18 வயது நிறைவடைந்த நபர்கள் மட்டுமல்லாது, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வரை பெறலாம்.ஒரே விஷயம் என்னவென்றால், இங்கே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சார்பாக பான் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். PAN கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் NSDL இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்ல வேண்டும். மைனர் வயது சான்று மற்றும் பெற்றோரின் புகைப்படம் போன்ற பிற முக்கிய ஆவணங்கள் உட்பட சரியான வகையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இணையதளத்திற்குத் தேவையான அனைத்து தகவல்களையும் நிரப்பவும். பெற்றோர்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளுக்காக விண்ணப்பிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பின்னர் விண்ணப்பக் கட்டணம் 107 ரூபாயை செலுத்தி படிவத்தை சமர்ப்பிக்கவும். இப்போது உங்களுக்கு ஒரு ரசீது எண் கிடைக்கப் பெறும். இதனைக் கொண்டு உங்கள் விண்ணப்பத்தை நீங்கள் கண்காணிக்கலாம். அதாவது விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை தெரிந்துக் கொள்ளலாம். அனைத்து சரிபார்ப்புகளும் வெற்றிகரமாக முடிந்த 15 நாட்களுக்குள் பான் கார்டு உங்களுக்கு கிடைக்கப் பெறும்.

தேவையான ஆவணங்கள் : குழந்தையின் பெற்றோரின் முகவரி மற்றும் அடையாளச் சான்று. விண்ணப்பதாரரின் (குழந்தையின்) முகவரி மற்றும் அடையாளச் சான்று. இதில் குழந்தையின் பாதுகாவலர் என்பதற்கான அடையாளச் சான்றாக ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பிக்கலாம். ஆதார் அட்டையின் நகல், தபால் அலுவலக பாஸ்புக், சொத்து பதிவு ஆவணம் அல்லது அசல் இருப்பிட சான்றிதழை முகவரி சான்றாக சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் குழந்தை உங்கள் முதலீட்டின் நாமினியாக இருந்தாலோ அல்லது குழந்தையின் பெயரில் முதலீடு செய்யப்பட்டாலோ குழந்தைகளுக்கான PAN அட்டை பயனுள்ளதாக இருக்கும்.

Kokila

Next Post

புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் மெட்டா.! Instagram, Threads சமூக வலைதளங்களில் அரசியல் பதிவுகளுக்கு தடையா.? விபரம் என்ன.!

Sat Feb 10 , 2024
இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு தேவையில்லாத அரசியல் ஊடகப்பதிவுகளால் இனி தொந்தரவு ஏற்படாது என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய வசதியின் அடிப்படையில் இன்ஸ்டாகிராம் ஒரு பதிவை இடும் போது பயனர்கள் பின்பற்றாத அக்கவுண்டுகளில் இருக்கும் அரசியல் பதிவுகளை அவர்களுக்கு பரிந்துரைக்காது என மெட்ட அறிவித்துள்ளது. இன்ஸ்டாகிராம் கடந்த வருடம் அறிமுகப்படுத்திய த்ரெட் செயலிக்கும் இந்த சேவை பொருந்தும் என அறிவித்திருக்கிறது. இன்ஸ்டாகிராம் மற்றும் த்ரெட் பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கவே […]

You May Like