fbpx

பான் இந்தியா திருடன்!… கார்த்தியின் ஜப்பான் படம் எப்படி இருக்கு?… விமர்சனங்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கும் கார்த்தி தற்போது ஹீரோவாக நடித்துள்ள படம் ஜப்பான் (Japan Movie). கொள்ளையனை மெயின் கதாப்பாத்திரமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு சில ரசிகர்கள் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

கார்த்தியின் ஜப்பான் திரைப்படத்தின் முதல் காட்சி, தமிழகத்தில் 9 மணிக்கும் ஒரு சில இடங்களில் 7 மற்றும் 8:30 மணிக்கும் ஆரம்பித்துள்ளன. தமிகழத்தை தவிர, பிற மாநிலங்களில் இப்படத்தின் முதல் காட்சி 6 மற்றும் 7 மணியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் தமிழ் ரசிகர்களை விட சீக்கிரமாகவே விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ஜப்பான். கார்த்தி (Karthi) ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தில் அனு இமானுவேல் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். கே.எஸ் ரவிகுமார் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக வருகிறார். ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை படத்திற்கு பெரிய பலம்.பாடல்களும் கேட்கும் ரகம். வித்தியாசமான கதைகளை தொடர்ந்து மக்களுக்கு கொடுக்கும் இயக்குனர் ராஜு முருகனின் மற்றொரு வித்தியாசமான முயற்சி.இந்த தீபாவளிக்கு படம் ரிலீஸாகியுள்ள நிலையில் இதற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள வரவேற்பு என்ன? இங்கே பார்ப்போம்.

ஆரம்ப காட்சிகளில் பரபரப்பாக தொடங்கும் கதைக்களம் அதன்பிறகு காட்சிகள் செல்ல செல்ல படத்தின் விறுவிறுப்பும் குறைகிறது. ஆங்காங்கே வரும் கலகலப்பான காட்சிகள் சற்று ஆறுதல். இடைவேளை டுவிஸ்ட் சிறப்பு. பல இடங்களில் கதையை தாண்டி படம் எங்கெங்கோ பயணிக்கிறது. எமோஷனல் காட்சிகள் பெரிய அளவில் எடுபடவில்லை. ஆங்காங்கே வரும் அரசியல் வசனங்கள் பளார். ராஜு முருகனின் முந்தைய படங்களில் இருந்த அழுத்தமும், ஏதார்தமும் மிஸ்ஸிங். மொத்தத்தில் தீபாவளிக்கு ஒரு சுமாரான படமாக ஜப்பான் வெளிவந்துள்ளது.

Kokila

Next Post

ஆஸ்கர் விருதுக்கு தேர்வான '2018'!… தென் அமெரிக்காவில் 400 திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது!

Sat Nov 11 , 2023
இந்திய சினிமாவிற்கு ஒரு வரலாற்று தருணம் என்று கூறப்படும், மலையாள சர்வைவல் த்ரில்லர் 2018 என்ற திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியுள்ள நிலையில், தென் அமெரிக்காவில் 400 திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. டொவினோ தாமஸ் நடிப்பில் இ ந்த ஆண்டு ’2018’என்ற படம் வெளியானது. இந்த படம் ஒரு சர்வைவல் ட்ராமா திரைப்படமாகும். 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. […]

You May Like