பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது கூட்டுக் குடும்பம் மூன்றாக பிளவு பட்டுவிட்டது. மீனாவின் தங்கை திருமணத்தில் நடைபெற்ற பிரச்சனை தான் இவை எல்லாவற்றிற்கும் காரணம்.
மொய் எழுதும்போது மூர்த்தி, கதிர், கண்ணன் என தனித்தனியே எழுதியதால் தான் தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாக ஜீவா சண்டை போட்டு இனி மாமியார் வீட்டிலேயே இருக்க போகிறேன் என்று தெரிவித்து விட்டார். அதன் பிறகு கண்ணனும், ஐஸ்வர்யாவும் சண்டை போட்டு தனியாக சென்று விட்டார்கள்.
இந்தத் தொடர் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சூழ்நிலையில், மீனா படப்பிடிப்பு தளத்தில் செய்திருக்கும் காரியம் ஒன்று தற்போது வீடியோவாக வைரலாகி வருகிறது. திருமண படபிடிப்பு நடைபெற்ற போது மாப்பிள்ளை கழுத்தில் அவர் தாலி கட்டி உள்ளார். அதன் பின்னர் அதே தாவியை எடுத்து பெண் கழுத்தில் கட்டி விட்டார். அந்த தாலியை கட்டிவிட்டு இனி ஜீவாவுக்கு 2 பொண்டாட்டி என்று தெரிவித்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.