விஜய் தொலைக்காட்சியில் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முதலில் அண்ணன் தம்பிகளில் ஜீவா தன்னுடைய குடும்பத்தை விட்டு பிரிவதாக தெரிவித்து மாமனார் வீட்டில் செட்டில் ஆகிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக வீட்டிற்கு வந்த மூர்த்தி மற்றும் தனத்திடம் ஐஸ்வர்யா ஒரு சண்டையை போடுகின்றார், இதன் காரணமாக, அவரும் வீட்டை விட்டு வெளியேற முடிவெடுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது. அடுத்ததாக என்ன நடக்கும்? என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இந்த தொடரில் ஜீவா கதாபாத்திரத்தில் நடிப்பவரின் பெயர் வெங்கட் என்று எல்லோருக்கும் தெரியும். எப்போதும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடும் வெங்கட் சமீபத்தில் தன்னுடைய மகள் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் அழகிய குடும்பம் என்று அந்த வீடியோவிற்கு தங்களுடைய விருப்பங்களை தெரிவித்து வருகிறார்கள்.