fbpx

“Mission EPS” எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்த கைகோர்த்த OPS – டிடிவி தினகரன் .! ஆதரவாளர்கள் அதிருப்தி.!

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் அனல் பறக்க தொடங்கி இருக்கிறது. பாஜக ஒரு பக்கம், அதிமுக மறுபக்கம் என இரண்டு கட்சிகளும் தங்களது தலைமையில் கூட்டணியை அமைக்க தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.

திமுக கூட்டணியில் இல்லாத மாநிலக் கட்சிகளுடன், பாஜக மற்றும் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது . முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு அதிமுக கட்சியில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்டனர்.

ஓ.பன்னீர் செல்வத்துக்கு கட்சியின் சின்னம் கொடி மற்றும் லெட்டர் பேட் போன்றவற்றை பயன்படுத்துவதற்கும் நீதிமன்றம் தடை விதித்தது. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அவர் தனது ஆதரவாளர்களுடன் செயல்பட்டு வருகிறார். அதேபோல டிடிவி தினகரன் அதிமுகவிலிருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தோற்றுவித்து செயல்பட்டு வருகிறார்.

தற்போது வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இருவரும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருப்பது ஏறக்குறைய உறுதியாக இருக்கிறது. வர இருக்கும் தேர்தலில் இவர்கள் இருவரும் எடப்பாடி பழனிச்சாமியை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒற்றை லட்சியத்துடன் இணைந்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எடப்பாடி பழனிச்சாமி நிறுத்தும் அதிமுக வேட்பாளர்களை டெபாசிட் இழக்க வைத்து தோற்கடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து இருப்பதாக அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

மேலும் சமீபத்தில் அமமுக கட்சியின் சார்பாக நடைபெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கூட்டத்தில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இருவரும் பங்கேற்றனர். அப்போது பேசிய ஓ. பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமியின் வேட்பாளர்களை ஒவ்வொரு தொகுதியிலும் டெபாசிட் இழக்க செய்வோம் என தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்து அவர்களது கட்சிக்குள்ளே சிறிது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த டிடிவி தினகரனின் ஆதரவாளர் நமது கட்சி வெற்றி பெற வேண்டும் என்று தேர்தலில் போட்டியிட வேண்டும். ஆனால் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்த வேண்டும் என்று தேர்தலை சந்திக்க இருக்கிறார்கள். இது அவர்களுக்கே பின்னடைவாக அமையும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

English Summary: TTV Dhinakaran and Panneerselvam team up to beat Edappadi Palanisamy. There party members have different opinion on this issue.

Read More: “Mission EPS” எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்த கைகோர்த்த OPS – டிடிவி தினகரன் .! ஆதரவாளர்கள் அதிருப்தி.!

Next Post

Annamalai | உதயநிதி முதல் திருமாவளவன் வரை..!! அண்ணாமலை போட்ட ஸ்கெட்ச்..!! அதிர்ச்சியில் திமுக தலைமை..!!

Tue Feb 27 , 2024
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுகவில் இருந்த ஜாபர் சாதிக் உள்பட அனைவரின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போதைப்பொருள் கடத்தல், பள்ளி மாணவர்களைக் கூட விட்டு வைக்காத போதைப் பொருட்களின் தாக்கம், தமிழகம் முழுவதுமே பரவலாக போதைப்பொருள்கள் கிடைப்பது ஆகியவைக் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளை சுட்டிக் […]

You May Like