fbpx

Pankaj Udhas | பெரும் சோகம்..!! பத்மஸ்ரீ விருது பெற்ற பழம்பெரும் பாடகர் பங்கஸ் உதாஸ் காலமானார்..!!

பிரபல பின்னணி பாடகர் பங்கஸ் உதாஸ் உடல்நலக்குறைவால் மும்பையில் இன்று காலமானார். அவருக்கு வயது 72.

பழம்பெரும் பாடகர் பங்கஜ் உதாஸ் நீண்டகால நோயின் காரணமாக இன்று (பிப்ரவரி 26) காலமானார் என்று அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். பாடகரின் குடும்பத்தினர் இதுகுறித்து அறிக்கையை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “பத்மஸ்ரீ விருது பெற்ற பங்கஜ் உதாஸ் நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.

இதனால், இன்று அவர் காலமானார். இதை மிகவும் கனத்த இதயத்துடனும், துயரத்துடனும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர். மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் இன்று காலை 11 மணியளவில் பங்கஸ் உதாஸ் காலமானார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், இதனால், அவர் யாரையும் சந்திக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. பாடகர் பங்கஸ் உதாஸின் இறுதிச் சடங்குகள் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 27) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary : Ghazal Singer Pankaj Udhas Passes Away After Prolonged Illness

Read More : மின் இணைப்புடன் Aadhaar எண்ணை இணைப்பது எப்படி..? நீங்களே வீட்டிலிருந்து செய்யலாம்..!!

Chella

Next Post

Devayani | நடிகை தேவயானியின் பண்ணை வீட்டில் இப்படி ஒரு அதிசயமா..? அடடே இது நல்லா இருக்கே..!!

Mon Feb 26 , 2024
தமிழ் சினிமாவில் விஜய், அஜித், கமல்ஹாசன், விஜயகாந்த், பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை தேவயானி. இவர், விக்ரமுடன் நடித்த விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தை ராஜகுமாரன் இயக்கி இருந்தார். ஒன்றாக சேர்ந்து வேலை செய்தபோது ராஜகுமாரன்-தேவயானி இடையே காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இனியா மற்றும் பிரியங்கா என இரு மகள்கள் உள்ளனர். சென்னையில் பிரம்மாண்டமாக ஒரு வீடு உள்ள நிலையில், […]

You May Like