பப்பாளி பழத்தை அதிகமாக சாப்பிடுவதால், தொண்டைக்கு சேதம் விளைவிப்பதோடு, உணவு குழாயை சுருங்க செய்யும் என்று ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது.
பப்பாளி பழத்தில், வைட்டமின் ஏ முதல் வைட்டமின் பி, சி, ஈ மற்றும் வைட்டமின் கே உள்ளிட்ட கலோரிகள், கொழுப்பு, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன. மருத்துவ குணங்கள் நிறைந்த பப்பாளி, நீரிழிவு, புற்றுநோய், சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
ஆனால் இதை அளவிற்கு அதிகமான சாப்பிட்டால், உடல் நிலையை கெடுக்கும். இது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை தருகிறதோ, அதே அளவு தீமையையும் உண்டாக்குகிறது. பப்பாளி பழத்த்தில் உள்ள லேடெக்ஸ் மற்றும் பாப்பைன் என்ற கலவை கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதத்தை உடைக்க வேலை செய்கிறது. இந்த பழத்தை அதிகமாக சாப்பிடுவதால், தொண்டைக்கு சேதம் விளைவிப்பதோடு, உணவு குழாயை சுருங்க செய்யும் என்று ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது.
மேலும், இதில் இருக்கும் அதிகமான நுகர்வு காரணமாக, வயிற்றுப்போக்கு மற்றும் செரிமான அமைப்புக்கு சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. பப்பாளியில், சர்க்கரை நோய் எதிர்ப்பு தன்மை இருந்தாலும், அதன் பயன்பாடு இரத்த சர்க்கரை பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.