fbpx

பாரா ஒலிம்பிக் | ஒரே போட்டியில் தங்கம் உள்பட 2 பதக்கங்களை வென்ற இந்தியா..!! அசத்திய வீராங்கனைகள்..!!

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. அதன்படி, 33-வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26ஆம் தேதி முதல் தொடங்கி கடந்த ஆகஸ்ட் 11இல் நிறைவடைந்தது. இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி பாரிசில் ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கியது.

இந்த பாராலிம்பிக்கில் இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். முதல் நாளில் பாரா டேக்வாண்டோ, பாரா டேபிள் டென்னிஸ், பாரா நீச்சல் மற்றும் பாரா சைக்கிள் ஓட்டுதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

இன்றைய போட்டியில், பாரா ஒலிம்பிக் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீராங்கனை அவ்னி லேக்ரா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அதேபோல், துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை மோனா அகர்வால் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் இந்திய அணி இரண்டு பதங்கங்களை வென்று அசத்தியுள்ளது.

Read More : ’சீமானை பற்றி பேசினால் உடனே அட்டாக் பண்ணனும்’..!! சாட்டை துரைமுருகனின் சர்ச்சை ஆடியோ..!!

English Summary

India wins gold medal in Paralympic 10m shooting.

Chella

Next Post

தொண்டு நிறுவனங்களை அடிச்சி விரட்டுறாங்க..!! சூரி உணவகத்தில் நடக்கும் அதிர்ச்சி சம்பவம்..!! கதறும் பொதுமக்கள்..!!

Fri Aug 30 , 2024
Actor Soori Amman restaurant will be affected, so they are driving away the charities that provide us with food.

You May Like