fbpx

பாராலிம்பிக்!. 25வது பதக்கத்தை வென்றது இந்தியா!. ஜூடோவில் அதிசயம் செய்த கபில் பர்மர்!.

“Kapil Parmar”: பாரா ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி துவங்கிய நிலையில், செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா 7ம் நாளான (செ.4) வரை 24 பதக்கங்களை வென்றிருந்தது. இதில் 5 தங்கம், 9 வெள்ளி மற்றும் 10 வெண்கல பதக்கங்கள் அடங்கும். தற்போது ஜூடோவில் இந்திய வீரர் கபில் பர்மார் வெண்கலம் வென்றதை அடுத்து இந்தியா தனது 25 ஆவது பதக்கத்தை பெற்றது.

ஆண்கள் பாரா ஜூடோ விளையாட்டின் 60 கிலோ எடை பிரிவில் பிரேசில் நாட்டின் எலிடன் டி ஒலிவெய்ராவை எதிர்த்து விளையாடிய கபில் பர்மார் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை பெற்றுள்ளார். முன்னதாக, ஜூடோ ஆடவர் 60 கிலோ ஜே1 பிரிவில் இந்தியாவின் கபில் பர்மர் காலிறுதி ஆட்டத்தில் வெனிசுலாவின் மார்கோஸ் டென்னிஸ் பிளாங்கோவை 10-0 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
அதன்படி, 8ம் நாள் முடிவில்(செப்.5) 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களுடன் இந்தியா, 16வது இடத்தில் உள்ளது.

Readmore: பல கட்ட பேச்சுவார்த்தைக்குபின் பிரான்சின் புதிய பிரதமர் தேர்வு!. யார் இந்த மைக்கேல் பார்னியர்?

English Summary

Paralympics! India won the 25th medal! Kapil Parmar who did a miracle in Judo!.

Kokila

Next Post

Alert...! உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி...! வெளுத்து வாங்க போகுது கனமழை...!

Fri Sep 6 , 2024
A new low pressure area has formed over the coastal areas of North Andhra Pradesh and South Odisha.

You May Like