fbpx

மீண்டும் எச்சரிக்கை எதிரொலி.! பள்ளிகளுக்கு விடுமுறையா.? பெற்றோர்கள் மாணவர்கள் எதிர்பார்ப்பு.!

தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.

. தமிழகத்தின் வட மாவட்டங்களான காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மேலும் தலைநகரான சென்னை திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை நெல்லை தூத்துக்குடி ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருப்பதால் இந்தப் பகுதிகளில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா.? என்ற எதிர்பார்ப்பில் பெற்றோர்களும் குழந்தைகளும் காத்திருக்கின்றனர். கடந்த மாதம் பெய்த கனமழையால் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து மக்கள் பல்வேறு அவதிக்க ஆளானது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக மீண்டும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

Next Post

"தவழ்ந்து தான் முதலமைச்சரானேன்.." "அது என்னுடைய கடின உழைப்பு.." எஸ்டிபிஐ மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உருக்கம்.!

Sun Jan 7 , 2024
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் சார்பாக மதுரையில் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான திரு எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் முதலமைச்சராவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை என தெரிவித்திருக்கிறார். அடிமட்ட தொண்டனாக இருந்து கடினமாக உழைத்து முதலமைச்சர் பதவியை அடைந்திருக்கிறேன். கீழிருந்து தவழ்ந்து தவழ்ந்து நான் […]

You May Like