fbpx

பெற்றோர்களே உஷார்..!! மேகி சாப்பிட்ட 10 வயது குழந்தை பலி..!! குடும்பத்தினருக்கு தீவிர சிகிச்சை..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட் என்ற பகுதியில் மேகி சாப்பிட்ட 10 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமீப காலங்களாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மேகி சாப்பிட விரும்புகின்றனர். இது விரைவாக சமைக்கும் ஒரு சுவையான நொறுக்குத் தீனி ஆகும். ஆனால் பிலிபிட்டில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மேகி சாப்பிட்டதால் நோய் வாய்ப்பட்டுள்ளனர். இதில், 10 வயது அப்பாவி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இவர்கள் அனைவரும் மேகி சாப்பிட்டதாகவும், பிறகு அனைவருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த சம்பவத்தை அடுத்து, அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், சிகிச்சைக்கு பின் அனைவரும் குணமடைந்துள்ளனர். இந்த சம்பவம் ஹசாரா பகுதியில் உள்ள ராகுல் நகரில் நடந்துள்ளது. மேகி சாப்பிட்ட பிறகு, குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. பிறகு அனைவரும் அவசரமாக உள்ளூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஆனால், சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாததால், சிஎச்சி புரான்பூருக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சைக்கு பின் அனைவரும் குணமடைந்துள்ளனர். ஆனால், 10 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : விஜயகாந்த் நினைவிடத்தில் பத்ம பூஷண் விருது.!! மரியாதை செலுத்திய பிரேமலதா..!!

Chella

Next Post

Solar Storm | பூமியை தாக்கிய சூரிய புயல்.!! வானில் நிகழ்த்திய மாயாஜாலம்.!! முழு விபரங்கள்.!!

Sat May 11 , 2024
தீவிரமான சூரிய புயல்(Solar Storm) பூமியை தாக்கி இருக்கிறது. அதன் ஆற்றல் பூமியின் சக்தி மற்றும் தகவல் தொடர்புகளை சீர்குலைக்கும் அபாயம் குறித்த கவலைகளை எழுப்பி இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வணக்கத்திற்கு மாறான வலுவான சூரிய புயல் டாஸ்மேனியாவிலிருந்து பிரிட்டன் வரை மற்றும் கனடாவில் இருந்து அமெரிக்கா வரை வீசியது. இந்த சூரிய புயல் வானத்தில் கண்கவர் ஒளிக் காட்சிகளை உருவாக்கியது. இந்த வழக்கத்திற்கும் மாறான காட்சி அப்பகுதியில் உள்ளவர்களால் […]

You May Like