fbpx

பெற்றோர்களே உஷார்!. சாக்லெட் சாப்பிட்டு மயங்கி விழுந்த 4வயது சிறுவன்!. பரிசோதனையில் வெளியான பகீர்!.

Chocolate: கேரளாவில் சாக்லேட் சாப்பிட்ட 4 வயது சிறுவன் மயங்கி விழுந்த நிலையில், அதை பரிசோதன செய்ததில் மன அழுத்த நோய் சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும், ‘பென்ஸோடியாசெபைன்’ மருந்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின், கோட்டயம் மாவட்டம், மனர்காடு பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவன், கடந்த மாதம் 17ம் தேதி பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும், தலைசுற்றுவதாக கூறி மயங்கி விழுந்தான். மருத்துவமனையில் அனுமதித்தபோது சிறுவனின் ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது. உடனடியாக எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இதையடுத்து, சிறுவனின் சிறுநீர் பரிசோதனையில் ‘பென்ஸோடியாசெபைன்’ மருந்து கலந்திருப்பது தெரியவந்தது. மன அழுத்தம், பதற்றம் உள்ளிட்ட மனநல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளில் இந்த, ‘பென்ஸோடியாசெபைன்’ மிக முக்கியமானது.

சிறுவன் மயங்கி விழுந்த தினத்தன்று, பள்ளியில் இருந்து வீடு திரும்புவதற்கு முன், சாக்லேட் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை பார்த்ததாக பள்ளி ஆசிரியை ஒருவர் தெரிவித்தார். சிறுவனின் குடும்பத்தார் இதைப்பற்றி செய்தி தொலைக்காட்சியில் நேற்று பேட்டி அளித்ததை தொடர்ந்து விஷயம் வெளியே தெரிந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தும் போலீஸ் அதிகாரி கூறியதாவது: முதற்கட்ட விசாரணையில், சிறுவன் படிக்கும் தனியார் பள்ளி தரப்பில் அலட்சியம் எதுவும் கண்டறியப்படவில்லை. பள்ளியில் இருந்து தன் தாத்தாவுடன் வீடு திரும்பும் வரை சிறுவன் நலமுடனே இருந்ததாக பள்ளி தரப்பில் கூறப்படுகிறது.

மேலும், சிறுவன் மயங்கி விழுந்த அன்று அவன் சாப்பிட்ட சாக்லேட்டை மற்றொரு சிறுவனுடன் அவன் பகிர்ந்ததாகவும், அந்த சிறுவன் நலமுடன் இருப்பதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த சாக்லேட்டை, தன் தாயார் தான் கொடுத்ததாக அந்த சிறுவன் தெரிவித்தான். அதை அவனது தாய் மறுத்துள்ளார். அந்த பெண், ‘லேப் டெக்னிஷியன்’ ஆக பணியாற்றி வருகிறார். கணவரை பிரிந்து தனியாக மகனுடன் வாழ்ந்து வருகிறார். சிறுவன் சாப்பிட்ட சாக்லேட்டில் தான் பென்ஸோடியாசெபைன் மருந்து கலந்திருந்ததா என்பது உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: நடிகை பலாத்காரம்..!! சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு..!! இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்..!!

English Summary

Parents beware!. 4-year-old boy fainted after eating chocolate!. Test reveals he is a phaggot!.

Kokila

Next Post

’சீமான் எங்களுக்கு தூசு மாதிரி’..!! ’நாங்க நினைச்சிருந்தா இந்த வழக்கை திசை திருப்பியிருப்போம்’..!! அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி

Mon Mar 3 , 2025
Minister Raghupathi has said that dealing with Seeman is like dust for us.

You May Like