வீட்டில் தனியாக இருந்த 6 வயது சிறுமிக்கு வாழைப்பழமும், சிப்சும் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சோழதேவனஹள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது தொட்டபயலகெரே கிராமம். இந்த கிராமத்தில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மணிஷ் என்பவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தங்கியிருந்த வீட்டின் அருகே தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். அந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கூலி வேலை செய்யும் இந்த தம்பதியினர், மகளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வேலைக்குச் சென்றுள்ளனர். இதை நோட்டமிட்ட மணிஷ் இந்த தம்பதியினர் கூலி வேலைக்குச் சென்றதும் வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் வாழைப்பழம், சிப்ஸ் கொடுத்து பேசிக்கொண்டிருக்கிறார்.

அப்போது திடீரென்று அக்குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதையடுத்து, பெற்றோர் வீட்டிற்கு வந்தவுடன் நடந்தவற்றை சொல்லி அச்சிறுமி அழுதிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சோழதேவனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் மணிஷ் மீது போட்டோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து செய்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.