fbpx

பெற்றோர்களே உஷார்..!! வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் நைசாக பேசி…!! விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!!

விழுப்புரம் அருகே வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவியிடம் நூதன முறையில் பேசி நகை, பணத்தை கொள்ளையடித்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் அசோகபுரி கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (40). இவர் கட்டிட மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கட்டிடப் பணிக்கு சித்தாள் வேலையாக உடன் சென்று வருவார். இவருடைய மகன் நவீன்ராஜ் (16) தும்பூரில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பும், மகள் நதியா 9ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபுவும், அவரது மனைவியும் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டனர். அவர்களது மகன் நவீன்ராஜ் விளையாட சென்றுவிட்டார். வீட்டில் நதியா மட்டும் தனியாக இருந்துள்ளார்.

பெற்றோர்களே உஷார்..!! வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் நைசாக பேசி...!! விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!!

அப்போது அங்கு ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் வந்து இறங்கிய நபர், பிரபு வீட்டிற்கு சென்று அங்கிருந்த நதியாவிடம் சீட்டுப்பணம் கட்டுவதற்காக ரூ.35 ஆயிரத்தை வாங்கிக் கொள்ளும்படி உனது பெற்றோர் அனுப்பியதாக கூறியுள்ளார். இதை நம்பிய நதியா, வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த பணம் இருக்கும் மஞ்சப்பையை அந்த நபரிடம் கொடுத்துள்ளார். அப்போது நதியாவிடம் அந்த நபர் நைசாக பேச்சு கொடுத்தபடி அவரது கவனத்தை திசை திருப்பி பீரோவில் இருந்த 9 பவுன் நகை மற்றும் அந்த மஞ்சப்பையில் இருந்த ரூ.50 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து அந்த நபர் தப்பியோடிவிட்டார். இதன் மொத்த மதிப்பு ரூ.3 லட்சத்து 50 ஆயிரமாகும். இதுகுறித்து பிரபு, கெடார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்த நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Chella

Next Post

பிரியாணியில் எலும்புத் துண்டு..!! காவல்துறையை நாடிய வாடிக்கையாளர்...!! பாய்ந்தது வழக்கு..!! நடந்தது என்ன..?

Wed Dec 28 , 2022
குஸ்கா என்ற ப்ளைன் பிரியாணி ஆர்டர் செய்யும் போது அதில் தவறுதலாக சிக்கன் அல்லது மட்டன் பீஸ் இருந்தால் அசைவ பிரியர்களை கையிலேயே பிடிக்க முடியாது. ஆனால், இப்படியான சம்பவம் ஒன்று சைவ பிரியருக்கு நடந்ததோடு, அது போலீசிடம் புகார் கொடுக்கும் அளவுக்கு சென்றிருக்கிறது. மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆகாஷ் தூபே என்பவர்தான் தனக்கு கிடைத்த சைவ உணவில் எலும்புத் துண்டு இருந்ததாக கூறி உணவக உரிமையாளர் மீது புகார் கொடுத்திருக்கிறார். […]
பிரியாணி பிரியர்களே ஷாக்கிங் நியூஸ்..!! இனி இந்த அரிசிக்கு தடையாம்..!! வெளியான அதிரடி அறிவிப்பு..!!

You May Like