fbpx

பெற்றோர்களே எச்சரிக்கை..! குழந்தைகளை மீண்டும் மிரட்டும் தக்காளி காய்ச்சல்..! – மருத்துவக் குழு

சிறு குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருவதாக, மருத்துவக் குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரிட்டனில் இருந்து வெளியாகும், ‘லான்செட்’ என்ற மருத்துவ ஆய்வு இதழில், இது தொடர்பான கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், கேரளாவில் இதுவரை 82 குழந்தைகளும், ஒடிசாவில் 26 குழந்தைகளும் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளையே அதிகம் தாக்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் 9 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடமும் இதன் பாதிப்பு உள்ளதாக நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. இந்தக் காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் மிக வேகமாக பரவக் கூடியது என்பதால், எச்சரிக்கையுடன் இருக்கவும், நோய் அறிகுறி ஏற்பட்ட உடனேயே சிகிச்சை பெற்றுகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெற்றோர்களே எச்சரிக்கை..! குழந்தைகளை மீண்டும் மிரட்டும் தக்காளி காய்ச்சல்..! - மருத்துவக் குழு

இந்த கொடிய தக்காளி காய்ச்சலின் அறிகுறிகள்..!

தக்காளி காய்ச்சல் குடல் வைரஸால் ஏற்படுகிறது. அத்துடன் இந்த வைரஸ் குழந்தைகளுக்கு மட்டுமே ஏற்படுகிறது. ஏனென்றால், பெரியவர்களுக்கு வைரஸில் இருந்து பாதுகாக்க போதுமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. தக்காளி காய்ச்சலில் அறிகுறிகளாக அதிக காய்ச்சல், உடல் வலி, மூட்டு வலி, சோர்வு போன்றவை இருக்கும். அதே நேரத்தில், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, நீர்ப்போக்கு பிரச்சனை, மூட்டுகளில் வீக்கம் மற்றும் உடலில் வீக்கம் போன்ற பிரச்சனைகளும் சில நோயாளிகளிடம் காணப்படுகின்றன.

Chella

Next Post

ஹோட்டல் அறையில் காதலியுடன் உல்லாசமாக இருந்த கைதி... வெளியில் காவல் காத்த போலீசார்... அதிர்ச்சி சம்பவம்..!

Mon Aug 22 , 2022
கர்நாடக மாநிலம், ஹூப்ளி மாவட்டத்தை சேர்ந்த கொலை குற்றவாளி பச்ஷா கான் (55). கொலை வழக்கில் 20 வருடங்கள் சிறை தண்டனை கைதியான பச்ஷா கான் தற்போது பல்லாரி சிறையில்உள்ளார். இந்நிலையில், இந்த வழக்க்கு தொடர்பாக பச்ஷா கான் நேற்று தஹர்வாட் பகுதியில் இருக்கும் நீதிமன்றத்திற்கு மூன்று காவல்துறையினரால் அழைத்து வரப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு மீண்டும் தஹர்வாட் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது, பச்ஷா கானின் கேட்டு கொண்டதால் […]

You May Like