fbpx

பெற்றோர்களே!… குழந்தைகளின் தூக்கத்தை கவனியுங்கள்!… இந்தமாதிரி மாற்றங்கள் ஏற்படுகிறதா?

குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் மட்டுமின்றி, குழந்தைகள் நடந்து கொள்ளும் விதத்தை தீர்மானிப்பதில், தூக்கம் ஒரு முக்கிய காரணியாக விளங்குவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் உள்ள இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், 9 முதல் 10 வயதுக்குட்பட்ட 11,858 குழந்தைகளின் தரவுகளை பயன்படுத்தி தூக்கமின்மை, தூங்குவதற்கு எடுக்கும் நேரத்தின் அளவு, கிளர்ச்சியான நடத்தைக்கான தொடர்பு குறித்து ஆராய்ந்தனர். இதில் தூக்கத்திற்கும், மனக்கிளர்ச்சியான நடத்தைகளுக்கும் தொடர்பு இருப்பதை கண்டறிந்தனர். தினமும் போதுமான அளவு தூங்கும் குழந்தைகளுக்கு, மன அழுத்தம் மிக்க சூழலை சமாளிக்கும் திறன் அதிகமிருந்துள்ளதை கண்டறிந்துள்ளனர்.

இதுதொடர்பாக ஆய்வில் கலந்துகொண்ட மாணவர் லின் ஹாவோ ஜாங் கூறுகையில், பொதுவாக குழந்தைகள் பரிந்துரைக்கப்பட்ட 9 மணிநேரத்தை விட குறைவாக தூங்கும்போது அல்லது தூங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டால், பிற்காலத்தில் மனக்கிளர்ச்சியான நடத்தைகளுக்கு அதிக வாய்ப்பு இருந்தது. இதில் திட்டமிடலின்றி செயல்படுதல், சிலிர்ப்புகள் அல்லது உணர்வுகளை தேடுதல், விடாமுயற்சியின்மை உள்ளிட்டவைகள் அடங்கும் என்று கூறினார். இருப்பினும், இந்த செயல்களுக்கு மத்தியில் தூக்கம் ஒரு இணைப்பாக இருந்தது. மேலும் தூக்கப் பிரச்சனைகள் இல்லாதபோது, எதிர்காலத்தில் மனக்கிளர்ச்சியும் குறைவாகவே காணப்பட்டது. நரம்பியல் ஹைப்பர் கனெக்டிவிட்டி என்பது இளம் பருவத்தினரின் மூளை அவர்கள் தீவிரமாக பணிகளில் ஈடுபடாதபோதும் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தது.

மேலும், ஆய்வில், இது குறிக்கோளை இயக்கும் நடத்தைகள் தொடர்பான மூளை ஓய்வெடுக்கும் நிலையில், அதிவேகமாக இருந்தால் மன அழுத்தம் நிறைந்த சூழல்கள், தூக்கம் மற்றும் மனக்கிளர்ச்சி ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை இது அதிகப்படுத்தலாம். தூக்கத்திற்கும், குழந்தைகளின் கவனக்குறைவுக்கும் உள்ள தொடர்பு குறித்து வரும் காலத்தில் ஆராய உள்ளோம். இந்த ஆய்வு அறிவாற்றல் மற்றும் நடத்தை வளர்ச்சியில் தூக்கத்தின் பங்கை எடுத்துக்காட்டுவது மட்டுமல்லாமல் வீட்டில் அழுத்தங்களை எதிர்கொள்ளும் குழந்தைகளின் உளவியல் வளர்ச்சிக்கு எளிய தீர்வை இருப்பதை காட்டுகிற து என்று லின் ஹாவோ ஜாங் கூறினார்.

Kokila

Next Post

சூப்பர்...! மகளிர் உரிமைத்தொகை....! வெளியான 2 முக்கிய அப்டேட்கள்...! என்ன தெரியுமா...?

Sun Sep 3 , 2023
மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. முதற்கட்ட முகாம்கள் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 04-ம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 05-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெற்றது. இதுவரை 1.54 கோடிக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. அருகில் மகளிர் உரிமை […]

You May Like