பிரபல இந்திய கால்பந்து வீரர் பரிமல் டே உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
முன்னாள் இந்திய கால்பந்து வீரர் பரிமல் டே, தனது 81வது வயதில் கொல்கத்தாவில் காலமானார். நீண்டகால உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று காலமானார். அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு முன்னாள் இந்திய சர்வதேச வீரரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. மே 04, 1941 இல் பிறந்த பரிமல் டே 2019 இல் மேற்கு வங்க அரசால் பங்கா பூஷன் விருது வழங்கி கௌரவித்தது.
1966 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த மெர்டேகா கோப்பையில் கொரியா குடியரசுக்கு எதிரான ஆட்டத்தில் பரிமல் டே ஒரே கோலை அடித்தார், இதன் மூலம் இந்தியா வெண்கலப் பதக்கம் வெல்ல உதவினார். அவர் இந்திய அளவில் மிகவும் வெற்றிகரமான வீரராக இருந்தார். ஈஸ்ட் பெங்கால் அணிக்காக முன்னோடியாக இரண்டு சந்தோஷ் கோப்பைகளை வென்றார், மேலும் 1968 இல் கிளப்பின் தலைவராகவும் இருந்தார். இவரது மறைவிற்கு அவரது ரசிகர்கள் இரங்கல் செய்தியை பதிவு செய்து வருகின்றனர்.