fbpx

பாரிஸ் ஒலிம்பிக் 2024!… வீரர்களின் அறைகளில் ‘பாலியல் எதிர்ப்பு படுக்கைகள்!

Paris Olympics 2024: பாலியல் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் முயற்சியாக, பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களின் அறைகளில் ‘பாலியல் எதிர்ப்பு’ படுக்கைகள் (Ultra Light Cardboard) வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

4 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும், ஒலிம்பிக் தொடரின் அடுத்த பதிப்பானது நடப்பாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரானது, வரும் ஜூலை 24ம் தேதி முதல், ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற இருப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 206 நாடுகள் பங்கேற்கும் என்றும் சுமார் 10,000 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு முன்னதாக, பாலியல் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் முயற்சியாக, விளையாட்டு வீரர்களுக்காக அமைக்கப்பட்ட அறைகளில் ‘பாலியல் எதிர்ப்பு’ படுக்கைகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, பாலியல் செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் அறைகளில் அல்ட்ரா-லைட் கார்ட்போர்டு படுக்கைகளை வைக்கப்பட்டுள்ளன. ஏர்வீவ் வடிவமைத்த, இந்த படுக்கைகள் அட்டைப் பிரேம்களால் செய்யப்பட்டவை, அவை அதிக எடையை வைத்தால் இடிந்து விழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒன்றுக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் படுக்கையில் படுக்க முடியாது. குறிப்பிடத்தக்க வகையில், மெத்தைகள் மற்றும் சட்டங்கள் இரண்டும் முற்றிலும் மறுசுழற்சி செய்யக்கூடியவை. மேலும் இந்த படுக்கைகளில் ஒற்றை சட்டங்கள் மற்றும் வழக்கமானவற்றைப் போல உறுதியானவை அல்ல. இதேபோன்ற வடிவமைப்பு படுக்கைகள் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: போகாதீங்க!… ரோஹித் சர்மாவை MI-ல் தங்க வைக்க முயற்சி!… நீத்தா அம்பானியின் உரையாடல் வைரல்!

Kokila

Next Post

ஒரே பெயரில் பல மின் இணைப்புகள்..!! 100 யூனிட் இலவச மின்சாரம் இனி கிடையாது..!! தமிழ்நாடு மின்வாரியம் அதிரடி..!!

Sat May 18 , 2024
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் உச்சம் அடைந்த போது மின் தேவையை சமாளிக்க மின்சார வாரியம் தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்தது. எப்போதும் இல்லாத வகையில், இந்தாண்டு மின்சார தேவை உச்சக்கட்டத்தை தொட்டது. இதனால் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதால் மின்சார வாரியம் மிகப்பெரிய தொகையை கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள, 2.34 கோடி வீடுகளுக்கும் 100 யூனிட் வரை […]

You May Like