fbpx

‘பாரிஸ் ஒலிம்பிக் 2024’!. பி.வி.சிந்து, ஷரத் கமல் ஆகியோர் தேசியக் கொடியை ஏந்தி செல்வார்கள்!.

‘Paris Olympics 2024’: பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் சரத் கமலுடன் இணைந்து தேசியக் கொடியை பி.வி.சிந்து ஏந்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடர், வரும் ஜூலை 26ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது. ஆகஸ்ட் 11ஆம் தேதியுடன், இத்தொடர் நிறைவு பெறும். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா மொத்தம் 16 விளையாட்டுகளில் பங்கேற்க உள்ளது. சுமர் 112 இந்திய வீரர், வீராங்கனைகள் களமிறங்க உள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா ஈட்டு எறிதலில் தங்கம் வென்றுகொடுத்தார். மேலும் இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியது.

இந்நிலையில் பாரீஸ் ஒலிம்பிக்கில் சரத் கமலுடன் இணைந்து தேசியக் கொடியை பி.வி.சிந்து ஏந்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா வெளியிட்டுள்ள அறிக்கையில்,எங்கள் குழுவை வழிநடத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒருவரை நான் தேடிக்கொண்டிருந்தேன். ஒலிம்பிக்கில் இந்தியாவின் பெண் கொடி ஏந்திய வீராங்கனையாக பிவி சிந்து டேபிள் டென்னிஸ் நட்சத்திரம் ஷரத் கமலுடன் வருவார்.

தொடக்க விழாவில் ஷரத் கமலுடன் இணைந்து பெண் கொடி ஏந்தியவர் டெபிள் டென்னிஸ் வீராங்கனை பி.வி.சிந்து இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் ஒரே பெண்மணி என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு சிறந்த முடிவுகளை வழங்க எங்கள் விளையாட்டு வீரர்கள் நன்கு தயாராக உள்ளனர் என்று நான் நம்புகிறேன்.” என்று கூறியுள்ளார்.

அதேபோல் நான்கு முறை ஒலிம்பியனும், 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் 10 மீ ஏர் ரைபிள் வெண்கலப் பதக்கம் வென்றவருமான ககன் நரங், ஜூலை 26 ஆம் தேதி தொடங்கும் பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க இந்தியக் குழுவின் தலைவராக செயல்படுவார் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

Readmore: இரவு விருந்தளித்த ரஷ்ய அதிபர் புதின்!. பிரதமர் மோடியின் தலைமை, சாதனைகளுக்கு பாராட்டு!

English Summary

Olympics 2024: PV Sindhu, Sharath Kamal to be India’s flag bearers, Gagan Narang named Chef-de-Mission

Kokila

Next Post

பொது இடங்களில் வன்முறையில் ஈடுபடும் மாணவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை!! - இரயில்வே காவல்துறை எச்சரிக்கை!!

Tue Jul 9 , 2024
Chennai Railway Police DSP Ramesh has warned that if the college students engage in continuous violence in trains, railway stations and public places, they will be punished with imprisonment of up to 2 years.

You May Like