fbpx

நாடாளுமன்றத்தில் கனிம வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதா – 2023 நிறைவேற்றம்…! சட்டத்தின் முக்கிய அம்சங்கள்

கடலோரப் பகுதிகள் கனிம வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதா – 2023 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். கடல் பகுதிகளில் செயல்பாட்டு உரிமைகளை ஒதுக்கீடு செய்வதற்கு ஏல நடைமுறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் பெரிய சீர்திருத்தத்துக்கு இது வழிவகுக்கும்.

இந்த திருத்தச் சட்ட மசோதாவின் முக்கிய அம்சங்கள்: இச்சட்டத்தின் கீழ் தனியாருக்கு இரண்டு வகையான செயல்பாட்டு உரிமைகள் போட்டி ஏலத்தின் மூலம் வழங்கப்படும். இச்சட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கலப்பு உரிமமானது ஆய்வு மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்திற்காக வழங்கப்பட்ட இரண்டு கட்ட செயல்பாட்டு உரிமையாகும்.

மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட கனிம வளப் பகுதிகளில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு செயல்பாட்டு உரிமைகள் வழங்கப்படும். அணுசக்தி கனிமங்கள் விஷயத்தில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு மட்டுமே செயல்பாட்டு உரிமை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

குட் நியூஸ்...! காவலர்களின்‌ குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகை உயர்வு...! தமிழக அரசு அரசாணை

Sat Aug 5 , 2023
காவலர்களின்‌ குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கும்‌ திட்டத்தின்‌மூலம்‌ தற்போது 100 மாணவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு தலா 25 ஆயிரம்‌ ரூபாய்‌ வீதம்‌ 4 வருடங்களுக்கு வழங்கப்படுவது, எண்ணிக்கை உயர்த்தப்பட்டு 200 மாணவர்களுக்கு 30 ஆயிரம்‌ ரூபாய்‌ வீதம்‌ வழங்கப்படும்‌ என்றும்‌, காவலர்களின்‌ குழந்தைகளுக்கு கல்விப்‌ பரிசுகள்‌ வழங்கும்‌ திட்டத்தின்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ பரிசுத்‌ தொகை இரட்டிப்பாக்கப்படும்‌ என்றும்‌ 2023-24ஆம்‌ ஆண்டிற்கான காவல்துறை மானியக்‌ கோரிக்கையின்‌ போது தமிழ்நாடு முதலமைச்சர்‌ […]

You May Like