fbpx

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்..!! ஜனவரி 31 முதல் தொடக்கம்..!! மத்திய அரசு அறிவிப்பு..!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

2023-2024ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் 27 அமர்வுகளாக 66 நாட்கள் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். முதல் அமர்வு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரையும், இரண்டாவது அமர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 6 வரையும் நடக்கிறது. பிப்ரவரி 14 முதல் மார்ச் 12ஆம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு இடைவெளி விடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுவார்.

Chella

Next Post

திருமணம் செய்யாமலேயே இத்தனை குழந்தைகளுக்கு தந்தையான அமெரிக்க இளைஞர்...!

Fri Jan 13 , 2023
அமெரிக்காவில் எந்த பெண்ணையும் திருமணம் செய்யாமலேயே இளைஞர் ஒருவர் 57 குழந்தைகளுக்கு தந்தையாகி இருக்கிறார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் கைலே என்ற இளைஞர். 31 வயதான இவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. எந்த பெண்ணுடனும் உறவு கொண்டது இல்லை ஆனாலும் அவர் 57 குழந்தைகளுக்கு தந்தையாகி இருக்கிறார். இரத்த தானம், உடல் உறுப்புகள் தானம் போல், கைலே விந்தணு தானம் செய்வதை பொழுது போக்காக செய்துவருகிறார். விந்தணு தானம் […]

You May Like