fbpx

“நீ ஒரு அரை கிழவி” vj பார்வதியை கலாய்த்த தாய்.. பதிலுக்கு பாரு என்ன சொன்னார் தெரியுமா?

மதுரையை பூர்வீகமாக கொண்ட vj பார்வதி, ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கினார். பின்னர், தமிழ் திரையுலகில் தொகுப்பாளராக, கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி, தற்போது சினிமா நட்சத்திரமாக உயர்ந்தவர் தான் vj பார்வதி. ஹிப்ஹாப் ஆதி நடித்து வெளியான சபதம் படத்தில் வி.ஜே பார்வதி நடித்துள்ளார். இவர் யூ டியூப் வீடியோவில், பொது இடங்களில் மக்களை சந்தித்து நகைச்சுவையாக பேட்டி எடுக்கும் பிராங்க் ஷோ நிகழ்ச்சி தொகுத்து வந்துள்ளார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலமானார்.

மேலும், ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அர்ஜுன் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சியில் ஆண்களுக்கு மத்தியில் கடுமையான டாஸ்கை அசால்டாக செய்து முடித்து, ரசிகர்களிடம் பாராட்டை பெற்றார். இவரது துணிச்சல் சிலருக்கு பிடித்திருந்தாலும், பலருக்கு இவர் ஆடை அணியும் விதம் பிடிக்கவில்லை. இதனால் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடும் எல்லா வீடியோ மற்றும் போட்டோவையும் ஆபாசமாக பலர் விமர்சித்து வருகின்றனர்.

அந்த வகையில், சமீபத்தில் பாரு தனது தாயுடன் சேர்ந்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவரது தாய், பாருவை பார்த்து அரை கிழவி என்று கலாய்க்கிறார். அதற்கு பாரு, அரை கிழவி என்று என்னை ஒரு முழுக் கிழவி சொல்கிறது என்று கலாய்த்துள்ளார். மேலும் பாருவின் தாய், “உனக்கு கல்யாணம் பண்ணுவது தான் எனக்கு முதல் வேலை என்று கூறியுள்ளார். மேலும், உன் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி மாப்பிள்ளையைக் கூட நீயே பார்த்துக்கொள். ஒரு வேலை யாரையாவது இருந்தால் முதலில் அதைச் சொல்லிவிடு. அதுக்கு தான் நான் காத்துக்கொண்டு இருக்கிறேன்” என்றார்.

மேலும் அவர், இனி நீ சனிக்கிழமை பார்ட்டிக்கு போவதை நிறுத்த வேண்டும். உடனடியாக தொப்பையைக் குறைக்க வேண்டும். இரவு இரண்டு மணிக்கு சினிமா பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்று கட்டளை போட்டுள்ளார்.

Read more: “நான் மதம் மாற இதான் காரணம்” பிரபல நடிகை கூறிய காரணம்…

English Summary

parvathy’s mother mocked her

Next Post

மூடநம்பிக்கையின் உச்சம்..! 11 ஆம் வகுப்பு மாணவி, சிவபெருமானுக்காக நாக்கை அறுத்து காணிக்கை..!

Tue Dec 31 , 2024
The peak of superstition..! 11th class student cut off her tongue and offered it to Lord Shiva..!

You May Like