fbpx

மக்களவையில் தொலைத்தொடர்பு மசோதா நிறைவேற்றம்!… அவசர நிலை ஏற்பட்டால் கட்டுப்பாட்டில் கொண்டுவர அரசுகளுக்கு முழு அதிகாரம்!

நாட்டில் அவசர நிலை ஏற்பட்டால் தொலைத்தொடர்பு சேவைகளை தற்காலிகமாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகளை அனுமதிக்கும் மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

கடந்த திங்கள்கிழமை மக்களவையில் மத்திய தகவல் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தொலைத்தொடர்பு மசோதாவை தாக்கல் செய்தார். அதில், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட எந்தவொரு அவசரநிலை ஏற்பட்டாலும் அல்லது பொதுநலன் கருதியும் தொலைத்தொடர்பு சேவைகளை தற்காலிகமாக தமது கட்டுப்பாட்டுக்குள் மத்திய மாநில அரசுகள் கொண்டுவரலாம். அந்த சேவைகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது அவசியம் அல்லது சூழ்நிலைக்கு உகந்தது என்று கருதினால், மத்திய மாநில அரசுகள் அல்லது அலை சார்பாக சிறப்பு அதிகாரம் பெற்ற அதிகாரம் பெற்ற அதிகாரி, அறிவிக்கை வெளியிட்டு அதை செய்யலாம்.

குற்றம்புரிய தூண்டப்படுவதை தடுத்தல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக அவசர நிலை சூழல்களின்போதும் அல்லது பொதுநலன் கருதியும் தொலைத்தொடர்பு சேவைகள் மூலம் அனுப்பப்படும் தகவல்களை தடுக்கலாம் அல்லது இடைமறித்து அறியலாம். அவசரநிலை பொது ஒழுங்கு உள்ளிட்டவை சார்ந்த விதிமுறைகளின்கீழ் தடை விதிக்கப்பட்டால் இந்தியாவில் வெளியிடுவதற்கு மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற செய்தியாளர்கள் அளிக்கும் பத்திரிகை செய்திகள் இடைமறிக்கப்படாது தடுக்கப்படாது.

செயற்கைக்கோள் தகவல் தொடர்பு நிறுவனங்களுக்கு ஏல முறையில் மட்டுமின்றி நிர்வாக வழிமுறையிலும் அலைக்கற்றை ஒதுக்கப்படும். தற்போது தொலைத்தொடர்பு சேவைகளை வழங்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசிடம் உரிமை பெறவேண்டும். இதற்கு பதிலாக அந்த நிறுவனங்கள்தொலை தொடர்பு சேவைகளை வழங்க உரிய ஒப்புதல் பெற்றால் போதும். தொலைத்தொடர்பு சாதனங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க விண்ணப்பதாரரின் பயோ மெட்ரிக் விவரங்களை கட்டாயம் சரிபார்த்த பின்னரே அவருக்கு தொலைதொடர்பு நிறுவனங்கள் சிம் கார்டு வழங்க வேண்டும். ஆள்மாறாட்டம் மோசடி மூலம் தொலைத்தொடர்பு சாதங்கள் அல்லது சிம் கார்டுகள் பெறப்பட்டால், 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் (நேற்று)புதன்கிழமை நடைபெற்றது. பெரும்பாலான எதிர்க்கட்சி எம்.பி.கள் இடைநீக்கம் செய்யப்பட்டதால் அவர்களால் விவாதத்தில் பங்கேற்க முடியவில்லை. இதனை தொடர்ந்து விவாதத்திற்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்த மசோதா தொலைத்தொடர்பு துறையில் அமைப்பு ரீதியான சீர்த்திருத்தங்களை ஊக்குவிக்கும். 138 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்திய தந்தி சட்டம் உள்பட 2 சட்டங்களை இந்த மசோதா ரத்து செய்யும். மேலும், இணைய வழி பாதுகாப்பு பிரச்சனைகளை கையாளுவதற்கான சட்ட அமைப்பு முறையையும் மசோதா வலுவாக்கும் என்று கூறினார். இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

Kokila

Next Post

சொத்துக்காக 7 நாட்களில் நண்பனின் குடும்ப உறுப்பினர்கள் 6 பேரை கொன்று வீசிய இளைஞர்..!! அதிர்ந்துபோன காவல்துறை..!!

Thu Dec 21 , 2023
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள முட்டுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிரசாத் மற்றும் பிரசாந்த். இவர்கள் இருவருமே சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். தொழிலில் நஷ்டம், குடும்ப தேவை என பல்வேறு காரணங்களால் பிரசாத் பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி கடன்காரர் ஆகிவிட்டார். பிரசாத் ஏற்கனவே நிறைய கடன் வாங்கி இருந்ததால், அவரால் வங்கியில் இருந்து கடன் வாங்க முடியவில்லை. இந்நிலையில், பிரசாத்திற்கு உதவுவதாக தெரிவித்த நண்பன் பிரசாந்த், வங்கியில் […]

You May Like