fbpx

பயணிகள் செம குஷி..!! நீண்ட நாள் ஆசை நிறைவேறுகிறது..!! ரயில்வேயில் வரும் புதிய மாற்றம்..!!

ரயில் பயணிகளின் நீண்ட நாள் ஆசையான, நமது சீட்டை நாமே புக் செய்யும் புதிய வசதியை ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் பயணிகளின் பயண தேவையை பூர்த்தி செய்வதில் ரயில்களுக்கு பெரும் பங்கு உண்டு. சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் கூட தொலை தூரங்களுக்கு செல்வது என்றால் ரயிலில் செல்லத்தான் விரும்புவாரக்ள். ரயிலில் டிக்கெட் இல்லை என்றால் மட்டுமே கார்களிலோ, பேருந்துகளிலோ பயணிப்பதை பற்றி நினைப்பார்கள். குறைவான கட்டணம், பாதுகாப்பான மற்றும் சொகுசான பயணம் என்பதால் பயணிகள் பலரும் ரயில்களில் பயணிப்பதையே விரும்புகின்றனர்.

ஆனால், சில சமயங்களில் ரயில்களில் டிக்கெட் கிடைப்பது பெரும் சவாலான ஒன்றாகவே உள்ளது. அதுவும் வார விடுமுறை, பண்டிகை நாட்களை பற்றி சொல்லவே தேவையில்லை, 4 மாதங்களுக்கு முன்பே புக் செய்யும் வசதி இருப்பதால் டிக்கெட் புக்கிங் ஓபன் ஆனவுடன் புக் செய்து விடுவார்கள். இந்நிலையில், பேருந்துகளில் இருப்பது போல காலியாக இருக்கும் படுக்கை, சீட்களை நாமே தேர்வு செய்து கொள்ளும் ஆப்ஷன்களை ரயில்வே கொண்டு வந்தால்தான் என்ன? என ரயில் பயணிகள் பலரும் முனு முனுப்பதை பார்க்க முடியும்.

இந்நிலையில், அப்படியான ஒரு வசதியைதான் ரயில்வே விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, ரயில்களில் எந்தெந்த படுக்கைகள் காலியாக உள்ளது என்பதை டிக்கெட் புக் செய்யும் போதே பார்த்துக் கொள்ளலாம். பிறகு நமக்கு லோயர் பெர்த் வேண்டுமா அல்லது அப்பர் பெர்த் வேண்டுமா? என செலக்ட் செய்து புக் பண்ணிவிட முடியும். அதாவது, செயலி வாயிலாக புக் செய்யும் போதே காலியாகவுள்ள படுக்கைகள் நமக்கு திரையில் காட்டப்படும். நமக்கு தேவையான ஸ்லீப்பர் சீட்களை அதைப் பார்த்து புக் செய்துகொள்ளலாம். இந்த வசதியை அமலுக்கு கொண்டு வருவதற்கு தேவையான டெக்னிக்கல் விஷயங்களை ரயில்வே துறை மேற்கொண்டு வருகிறது.

ரயில்வே டிக்கெட் புக்கிங் முதல் ரயில் எங்கு வருகிறது என்ற விவரங்கள் என ரயில்வே சம்பந்தப்பட்ட அனைத்தையும் ஒரே பிளாட்பார்மில் கொண்டு வர ரயில்வே நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக சூப்பர் ஆப் என்ற செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த செயலியில் மேற்கூறிய வசதிகள் எல்லாம் வந்துவிடக்கூடும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த தகவலால் ரயிலில் அடிக்கடி பயணம் செய்வோர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Read More : ’கால் வைக்கிற இடம் எல்லாம் கன்னி வெடியா இருக்கே’..!! அஜித்தால் டென்ஷனான சீனியர் சிட்டிசன்..!!

Chella

Next Post

இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே.. தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவு அரசு மனநல சிகிச்சை மையங்கள் இருக்கா?

Fri Apr 19 , 2024
தமிழகத்தில் மனநல சிகிச்சை மையங்கள் எங்கெங்கு இருக்கின்றன என்பது நிறைய பேருக்கு தெரியாது. அந்த விவரங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.. பெரும்பாலான உடல் ஆரோக்கியப் பிரச்சினைக்கு மன ஆரோக்கியமே முக்கியக் காரணமாக இருக்கிறது. உடல் நலம் எந்த அளவு முக்கியமோ அதே அளவுக்கு மன நலமும் முக்கியம். மன அழுத்தம், மனச்சோர்வு உள்ளிட்ட பிரச்சினைகளினால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் உடல் ஆரோக்கியத்திலும் நிறைய மாற்றங்கள் ஏற்படுகிறது. மன நலத்தின் […]

You May Like