fbpx

பயணிகள் அதிர்ச்சி..!! இன்று மாலை 6 மணி முதல் ஸ்டிரைக்..!! ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவிப்பு..!!

இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இன்றுடன் தொடர் விடுமுறை (ஆயுத பூஜை) நாட்கள் முடிய உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பலரும் ஊர் திரும்ப பேருந்துக்கு முன்பதிவு செய்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 119 ஆம்னி பேருந்துகளை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிறைபிடித்துள்ளனர். இந்த பேருந்துகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து விதிமீறலில் ஈடுபட்ட சுமார் 119 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதோடு 2,092 பேருந்துகளுக்கு ரூ.37 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த சூழலில் ஆம்னி பேருந்துகளுக்கு கட்டண நிர்ணயம் இல்லாத போதிலும், அரசுக்கும் பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் சங்கங்களே கட்டண நிர்ணயம் செய்துள்ளன. இதனை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடந்த கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் மற்றும் ஆணையரிடம் ஒப்புதல் பெற்று, அதே கட்டணத்தில் இன்று வரை இயக்கி வருகிறோம் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க அறிவித்திருந்தது குறிப்படத்தக்கது. இது தொடர்பாக முதல்வருக்கு கடிதமும் சங்கத்தின் சார்பில் அனுப்பப்பட்டது.

Chella

Next Post

’ஆபத்து வந்துருச்சு’..!! 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!!

Tue Oct 24 , 2023
“புயல் உருவாகி உள்ளதை” குறிக்கும் வகையில் நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில், இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற்று வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இது நாளை (அக்.25) நண்பகலில் கெபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே ஆழமான காற்றழுத்த தாழ்வு […]

You May Like