ஒரு டெம்போவும் லாரியும் மோதி பாலத்தில் இருந்து விழுந்ததில் ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு பாட்னாவிலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள மசௌதி-நௌபத்பூர் சாலையில் நூர் பஜாரில் இந்த துயர விபத்து நிகழ்ந்தது.
பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தின் மசௌரியில் பகுதியில் இருந்து டெம்போ ஒன்று நேற்று இரவு சுமார் 10 பயணிகள் வரை ஏற்றிக்கொண்டு வந்தது. அப்போது எதிரே வந்த லாரி டெம்போ மீது மோதியது. இதில் இரண்டு வாகனங்களும் பாலத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த மற்ற பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து சரியாக ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணிக்கு நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் இந்த மோதல் நடந்தது. ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தனர்.
Read more : ஈஷா யோகா மைய சிவராத்திரி நிகழ்ச்சிக்கு தடையில்லை..!! – உயர் நீதிமன்றம்