தமிழ்நாடு அரசின் ஓய்வூதியதார்களுக்கு நேர்காணல் செய்து கொள்ள புதிய வசதிஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களின் வசதிக்காக புதிய அறிவிப்பாணைப்படி, சேலம் மாவட்ட கருவூல அலகில் ஓய்வூதியம் பெறும் குடிமை ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஆசிரியர் ஓய்வூதியம் பெறுபவர்கள், தாங்கள் ஓய்வு பெற்ற மாதம் மற்றும் இந்த மாதத்திற்குள் நேர்காணல் செய்திட வேண்டும். குடிமை குடும்ப ஓய்வூதியதாரர்கள், ஆசிரியர் குடும்பஓய்வூதியதாரர்கள் அனைவரும் தங்கள் குடும்ப ஓய்வூதியம் தொடங்கப்பட்ட மாதம் மற்றும் இம்மாதத்திற்குள் நேர்காணல் செய்திட வேண்டும்.
இதர ஓய்வூதியங்கள் மற்றும் சிறப்புஓய்வூதியதாரர்கள் தங்களுக்கு ஓய்வூதியம் முதன்முதலில் வழங்கப்பட்ட மாதம் மற்றும்அடுத்த மாதத்திற்குள் நேர்காணல் செய்திட வேண்டும். இரண்டு ஓய்வூதியம் பெறுகின்றஓய்வூதியதாரர்கள், தாங்கள் ஓய்வு பெற்ற மாதம் மற்றும் அடுத்த மாதத்திற்குள் நேர்காணல் இரண்டிற்கும் சேர்த்து செய்து கொள்ளலாம்.
தற்போது அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஆண்டுதோறும் நேர்காணல் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் ஓய்வு பெற்றவர்கள் ஜூலை மாதத்திற்குள் நேர்காணல் செய்து கொள்ள வேண்டும். ஆகஸ்ட் 2023 முதல் டிசம்பர் 2023 வரை மற்றும் ஜனவரி 2024 முதல் மார்ச் 2024வரை அவரவர் தாம் ஓய்வு பெற்ற மாதம் மற்றும் அடுத்த மாதம் வரை நேர்காணல் முடித்துக் கொள்ள வேண்டும்