fbpx

மக்களே அலர்ட்..!! தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனைகள் தீவிரம்..!! எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!

மதுரை, திருச்சி, கோவை, திருவள்ளூர் மாவட்டங்களில் தலா ஒருவருக்கு ஜேஎன் 1 வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 3 அலைகளாக பரவி பல லட்சம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்று, கடந்த ஓராண்டாக கட்டுக்குள் இருந்தது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தாய்லாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தோனேசியாவைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் ஜேஎன்1 வகை கொரோனா தீவிரமாகப் பரவி வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், புதிய வகை கரோனா தொற்றாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டது.

சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் 4 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை மறுத்த தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள், பரிசோதனைகள் முடிவுகள் இன்னும் வரவில்லை என்றனர். இந்நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. கொரோனா உருமாற்றமடைந்து கொண்டே இருக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாகப் பணிபுரிந்த மருத்துவர் சவுமியா சுவாமிநாதன் கூறியிருந்தார். அதனை உறுதிபடுத்தும் வகையில் ஜேஎன்1 வகை தொற்று தற்போது இந்தியாவில் பரவி வருகிறது.

இந்நிலையில், திருச்சி, மதுரை, கோவை, திருவள்ளுர் மாவட்டங்களைச் சேர்ந்த 4 பேருக்கு ஜேஎன்1 வகை கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். பெரிய அளவில் அச்சப்படத் தேவையில்லை. கர்ப்பிணிகள், முதியோர், இணை நோயாளிகள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். மரபணு பகுப்பாய்வுக்கு தமிழ்நாட்டில் இருந்து அனுப்பப்பட்ட மேலும் 96 மாதிரிகளின் முடிவுகள் அடுத்த சில நாட்களில் வெளியாகும்” என்று தெரிவித்தார்.

Chella

Next Post

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 8 மாவட்டங்களிலும் மழை..!! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

Thu Dec 28 , 2023
தமிழ்நாட்டில் கடலூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஜன. 2ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை […]

You May Like