fbpx

’மக்களே எல்லாம் தயாரா இருங்க’..!! ’இது ரொம்ப அவசியம்’..!! கடலூர் ஆட்சியர் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!

கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்துவரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அருண்தம்பு ராஜ் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பான அறிக்கையில், கடலுார் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக, பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளின் அருகில் வசிக்கும் பொதுமக்கள் கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாவட்டத்தில் கனமழை காலங்களில், பொதுமக்கள் நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பொதுமக்கள் அனைவரும், இடிமின்னலுடன் கனமழை பெய்து வரும்போது திறந்தவெளியில் நிற்பதையும், நீர்நிலைகளில் குளிப்பதையும், மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளின் கீழ் நிற்பதையும் தவிர்க்க வேண்டும். மழை/வெள்ளநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டிவைக்கக் கூடாது. வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

பொதுமக்கள் தங்களது ஆதார்/குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை நெகிழி உறைகளில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். பேரிடர் காலங்களில், பொதுமக்கள் டார்ச்லைட், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்க வேண்டியது அவசியம். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பேரிடர் கால நடவடிக்கைகள் மேற்கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசரகால கட்டுப்பாட்டு அறையில் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களும் செயல்பட்டு வருகிறது.

கட்டணமில்லா தொலைபேசி எண்- 1077, 04142 220700, 04142233933 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம். மேற்படி பெறப்படும் புகார்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, கட்டுப்பாட்டு அறையில் சுழற்சி முறையில் பணிபுரியும் அலுவலர்கள் மூலம் புகார்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் நேரடியாக தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

ஷாப்பிங் போறீங்களா?… தெரியாமல் கூட இந்த தவறை செய்யாதீர்கள்!… மொத்த பணமும் போயிடும்!

Mon Nov 13 , 2023
இந்தியாவில் தற்போது, நேரடியாகக் கடைக்குச் சென்று வாங்குவது முதல் ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்வது வரை பல்வேறு முறைகளில் தங்களுக்குப் பிடித்த ஆடை, நகை, எலெக்ட்ரானிக் பொருட்கள் போன்ற பல்வேறு பொருட்களை வாங்குகின்றனர். இதற்காக வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இதற்கிடையில், ஹேக்கர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மோசடி செய்கின்றனர். உண்மையில் இதுபோன்ற மோசடிகள் நீண்ட காலமாகவே நடந்து வருகின்றன. அதுவும் தீபாவளி போன்ற பண்டிகை சமயங்களில் மோசடிகள் இன்னும் […]

You May Like