கொரோனா வைரஸின் வீரியமானது குறைந்து நம்மை விட்டு ஒழிந்து விட்டதாக நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், கொரோனா வைரஸ் புது புது வடிவங்களில் நம்மை சுற்றிக்கொண்டு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் புயலை கிளப்பிய இந்த கொரோனா வைரஸ், 2020 தொடக்கத்தில் உலகை ஒரு கலக்கு கலக்க பிறகு உருமாற தொடங்கியது. இதன் காரணமாக முதலில் ஒரு அலை உருவானது. அதன் பிறகு டெல்டா பிளஸ் என்ற இரண்டாவது மோசமான அலை உருவானது. இதில் தான் நிறைய உயிர்கள் பறிக்கப்பட்டது.
பின்னர், 2021ஆம் ஆண்டு ஒமைக்ரான் என்ற புதிய வடிவத்துக்கு மாறி அதனுடைய ஆட்டம் முடிவுக்கு வரத் தொடங்கியது. தற்போது இந்தியா முழுவதும் எக்ஸ் பிபி.1.16 வகை வைரஸ் தான் மிக மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியாது என்பது உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியது ஆறுதலான விஷயமாக மாறியது. இந்த வைரஸ் பாதித்தால் இரண்டு நாட்களிலேயே குணமாகிவிடும். இருப்பினும் கடந்த சில தினங்களாகவே இந்த வைரஸ் பரவல் கணிக்க முடியாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. தினசரி பாதிப்பானது 12,000 என்ற அளவில் இருக்கிறது.
இது 50,000 என்று அளவிற்கு கூட உயரும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் நிபுணர்கள் இதில் மாறுபட்டுள்ளனர். அதாவது மே மாதம் புதிய வகை கொரோனா வைரஸ் உச்சத்தை தொடும் என்றும் இன்னும் சுமார் 10 நாட்களில் இந்த கொரோனா வைரஸ் உச்சத்தை தொட வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. அதன் பிறகு இதனுடைய தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.