fbpx

’மக்களே எச்சரிக்கையா இருங்க’..!! இன்று 26 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை..!! – வானிலை மையம்

தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ”வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

’மக்களே எச்சரிக்கையா இருங்க’..!! இன்று 26 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை..!! - வானிலை மையம்

நாளை தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், டிசம்பர் 14ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் டிசம்பர் 15, 16ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

அடடே நம்ம கோலிசோடா கதாநாயகியா இது? நம்பவே முடியலையே!

Mon Dec 12 , 2022
இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம் கோலிசோடா. இந்த திரைப்படத்தில் கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, சீதா உள்ளிட்ட பல இளம் நடிகர்கள், நடிகைகள் நடித்திருந்தனர். இதில் சாந்தினி என்பவர் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் நடிப்பில் சொல்லிக்கொள்ளுமளவிற்கு எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை. ஆகவே நடிகை சாந்தினி திருமண வாழ்க்கையை ஏற்றுக் கொண்டார். இவருக்கு ஒரு அழகிய ஆண் குழந்தையும் […]

You May Like