fbpx

மக்களே மாம்பழங்கள் வாங்கும்போது கவனம்..!! ரசாயன கல் வைத்து பழுக்க வைத்ததை நீங்களே கண்டுபிடிக்கலாம்..!!

மாம்பழ சீசன் தற்போது தொடங்கியுள்ள நிலையில், மாம்பழங்களை எப்படி பார்த்து வாங்குவது, ரசாயன கல் வைத்து பழுக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டுபிடிக்க சில டிப்ஸ்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவில் இருந்து மாம்பழங்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. பொதுவாக மாம்பழங்கள் தானாக பழுக்க வேண்டும். சிலர் அதை அரிசி டிரம்பில் போட்டு வைப்பர், சிலர் வைக்கோல் போட்டு அதில் மாம்பழங்களை வைத்து பழுக்க வைப்பர். இதுதான் இயற்கையானது. இதனால் எத்தனை மாம்பழங்களை சாப்பிட்டாலும் உடலுக்கு ஒன்றுமே ஆகாது. ஆனால், மாம்பழங்களை மக்கள் வாங்கி அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மக்களின் உயிர்களுடனே சில வியாபாரிகள் விளையாட தொடங்கிவிட்டனர். மாம்பழங்கள் செங்காயாக இருக்கும் போதே அதை பழுக்கவைக்க ரசாயன கார்பைட் கல்லை வைத்துவிடுகிறார்கள்.

இதனால் உடலுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. தீராத வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்டவை ஏற்படுகின்றன. இதனால் சிலருக்கு புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, கல் வைக்காத மாம்பழங்களை எப்படி வாங்குவது என்பது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியை பார்ப்போம். இதுகுறித்து அவர் கூறுகையில், ”மாம்பழம் சீசன் வந்துவிட்டது. எந்தெந்த கடைகளில் மாம்பழங்கள் விற்கிறார்கள் என்ற முழு பட்டியல் எங்களிடம் உள்ளது. இந்த கடைகளுக்கு நாங்கள் குழுக்களாக சென்று இயற்கைக்கு மாறாக பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்து வருகிறோம். மாம்பழங்களில் கெமிக்கல் ஸ்பிரே செய்து கெமிக்கல் பாக்கெட்டுகளை போட்டு வைத்தும் பழுக்க வைக்கிறார்கள். எனவே, சீசன் தொடங்கும்போதே நாங்கள் கண்காணிப்பை அதிகரித்துள்ளோம். மாம்பழங்களை எப்படி வாங்குவது என பொதுமக்கள் எங்களிடம் கேள்வி கேட்கிறார்கள்.

பழக்கடைகளிலோ அல்லது சூப்பர் மார்க்கெட்டுகளிலோ சென்றவுடன் மாம்பழங்களை பார்த்தவுடன் நாம் இயற்கையாக பழுக்க வைத்ததா இல்லை செயற்கையாகவா என்பது தெரிந்து கொள்ள வேண்டும். மாம்பழங்களை அழகாக அடுக்கி வைத்திருப்பார்கள். அவற்றை பார்த்தால் எல்லாமே ஒரே மாதிரி இருக்கும். அது எப்படி பழுக்கும் என நம் மனதிற்குள் சந்தேகம் ஏற்பட வேண்டும். அந்த பழம் பார்ப்பதற்கு மஞ்சளா சாப்பிடுவதற்கு ஆசையாக இருக்கும். ஆனால், முகர்ந்து பார்த்தால் வாசனை ஏதும் வராது. ஒரு அறையில் ஒரு மாம்பழம் வைத்தாலே அதிக வாசனை வரும், ஆனால் அத்தனை மாம்பழங்கள் இருக்கும் நிலையில் ஒரு வாசனை கூட வராமல் இருக்கும். இது தெரியாமல் நாம் வீட்டிற்கு மாம்பழங்களை வாங்கி வந்துவிடுவோம். இதில் கல் வைத்திருக்கிறார்களா இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது..?

அந்த மாம்பழங்களை ஒரு பக்கெட் தண்ணீரில் போட்டுப் பாருங்கள். இயற்கையாக பழுத்திருந்தால் அந்த பழங்கள் நீருக்கு அடியில் செல்லும். செயற்கையாக கல் வைத்து பழுத்திருந்தால் அவை மேலே மிதக்கும். அந்த பழத்தை கட் செய்யும் போது காயை கட் செய்வதுபோல் இருக்குமே தவிர பழத்தை கட் செய்வது போல் இருக்காது. மேலே மட்டுமே பழுக்கும் மாம்பழங்களில் உள்ளே புளிப்பு அப்படியே இருக்கும். கட் செய்யும் போது கரகரவென இருக்கும். மாம்பழத்தின் பக்கத்தில் வெள்ளையாக இருந்தாலே அந்த பழம் செயற்கையாக பழுக்க வைத்தது என கண்டறியலாம். மாம்பழங்கள் இயற்கையாக 5 நிலைகளில் பழுக்கும். முதலில் காயாக இருக்கும். பிறகு அதன் மூக்கு பகுதி பழுக்கும். மூக்கு பகுதி முதல் காம்பு பகுதி வரை கொஞ்சம் கொஞ்சமாக பழுக்கும். பழுக்கும் போது இயற்கையான பழத்தில் ஆங்காங்கே சிவப்பு நிறம், மஞ்சள் நிறம் கலந்து இருக்கும். மாம்பழத்தை சாப்பிடும்போது அதில் ஒரிஜினலான மாம்பழத்தின் டேஸ்ட் இருக்காது. புளிப்பு தன்மைதான் இருக்கும். அதை வைத்தும் கண்டுபிடிக்கலாம்” இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

Chella

Next Post

இந்தியாவில் 2014-2022 ஆண்டு கால கட்டத்தில் புலிகள் எண்ணிக்கை 42% அளவுக்கு அதிகரிப்பு...!

Wed Apr 26 , 2023
உலக நிலப்பரப்பில் இந்தியா 2.4 சதவீத அளவுக்கு மட்டுமே உள்ளது. ஆனால் பல்லுயிர் பெருக்க விகிதத்தில் 8 சதவீதமாக இந்தியா உள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் வன விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இயற்கையைப் பாதுகாக்கும் கலாச்சாரத்துடன் பல்லுயிர் பெருக்கத்தில் இந்தியா சிறந்த வளர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த 75 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு சிவிங்கிப் புலிகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது உட்பட பல்லுயிர் பெருக்கத்தில் […]

You May Like