fbpx

மக்களே..!! மின் கட்டணம் செலுத்தும்போது கவனமா இருங்க..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் கடந்தாண்டு நுகர்வோருக்கான பொது சேவை மின் கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டது. இதனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள லிப்ட், மோட்டார் பம்பு போன்ற பொது சேவைகளுக்கு ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாய் மற்றும் மாதாந்திர நிரந்தர கட்டணம் கிலோ வாட்-க்கு 100 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடப்பாண்டு ஜூலை மாதம் மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், பொது சேவை பிரிவுகளுக்கு ஒரு யூனிட்டுக்கு 8.15 ரூபாயும், நிரந்தர கட்டணம் 102 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. இது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை எழுந்த நிலையில், தமிழ்நாடு மின்வாரியம் நவம்பர் 1ஆம் தேதி முதல் பொது சேவை பிரிவுகளுக்கான மின் கட்டணத்தை மாற்றி உத்தரவிட்டது.

10 அல்லது அதற்கு குறைவாகவும் 3 மாடியில் அல்லது அதற்கு குறைவாகவும் லிப்ட் வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு பொது சேவை பிரிவுக்கான கட்டணம் ஒரு யூனிட் 5.50 ரூபாயாக குறைக்கப்பட்டது. இதற்கு ஒன் இ என்ற புதிய கட்டண விகிதம் நியமனம் செய்யப்பட்ட நிலையில், ஒன் டி பிரிவில் மாற்றப்பட்ட மின் இணைப்புகளில் ஆய்வு செய்து ஒன்றிய மின் கட்டண விகிதத்தை மாற்றும் பணி டிச.31ஆம் தேதிக்குள் முடிப்பதற்கு உத்தரவிட்டுள்ளது.

பலரும் இந்த பணிகளை முடிக்காத நிலையில், நடப்பு மாதத்திற்கான மின் கட்டணத்தை பழைய உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை செலுத்தியுள்ளனர். எனவே, நுகர்வோருக்கு இது தொடர்பாக அரசு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Chella

Next Post

”ஜெயலலிதாவுக்கு ரூ.2 கோடி கடனாக கொடுத்தேன்”..!! இதுதான் வரலாறு..!! ஓபிஎஸ் பரபரப்பு தகவல்..!!

Tue Dec 26 , 2023
சென்னையில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்திய அதே நேரத்தில், கோவையில் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். இந்தக் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “சாதாரண தொண்டனாக இருந்த ஓபிஎஸ், நகர்மன்ற தலைவராக வந்திருக்க முடியுமா? எம்.எல்.ஏ ஆகியிருக்க முடியுமா? அமைச்சராகி இருக்க முடியுமா? முதலமைச்சராகி இருக்க முடியுமா? அதிமுகவின் இத்தனை ஆண்டு கால சரித்திரத்தில் 12 ஆண்டு காலம் கழகத்தின் பொருளாளராக இருந்தவன் நான் தான். ஜெயலலிதா என்னிடம் […]

You May Like