fbpx

வாவ்..! ரூ.755 இருந்தா போதும்… 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்களுக்கு ரூ.15 லட்சம் விபத்து காப்பீடு…!

18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம்.

அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555 அல்லது ரூ.755 பீரீமியத்தில், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. சாமானிய மக்களுக்கும் விபத்துக் காப்பீட்டு திட்டங்களின் பலன்கள் சென்றடையும் வகையில், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உள்ள அஞ்சலகங்கள் (தபால்காரர்/கிராம அஞ்சல் ஊழியர்கள்) மூலம், மிகக் குறைந்த பிரீமியத் தொகையுடன் கூடிய இந்த விபத்துக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். விண்ணப்பப் படிவம், அடையாள/முகவரி சான்றின் நகல்கள் போன்ற எந்த விதமான காகிதப் பயன்பாடுமின்றி, தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தைப் பயன்படுத்தி, வெறும் 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்தப் பாலிசி வழங்கப்படும்.

ரூ.10 லட்சம் அல்லது 15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீடு திட்டத்தின் கீழ் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம் ஆகியவற்றிற்கு ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்யும் வசதி, தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளும் வசதி, விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள் உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.1,00,000 வரை வழங்கப்படும்.

மேலும் விபத்தினால் மரணம், நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்வி செலவுகளுக்கு ரூ.1,00,000/- வரை விபத்தினால் மரணம்/ நிரந்தர முழு ஊனம்/நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) திருமண செலவுகளுக்கு ரூ.1,00,000/- வரை விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு, தினப்படி தொகை ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.1000/- வீதம் 15 நாட்களுக்கு ( 2 நாட்கள் கழிக்கப்படும்) விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால், ஈமக்கிரியைகள் செய்ய ரூ.5000 வரை பெறலாம்.

English Summary

People between the ages of 18 and 65 can join the accident insurance plan.

Vignesh

Next Post

சூப்பர் அறிவிப்பு...! இனி நில அளவை செய்ய அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்...!

Thu Mar 6 , 2025
You can now apply for land surveying through the nearest e-service centers.

You May Like